ஒரே நாளில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரே நாளில்...
இயக்கம்ஏ. ஆர். எம் ரசீம்
தயாரிப்புபிரில்லியண்ட் கிரியேசன்ஸ்
கதைஏ. ஆர். எம் ரசீம்
திரைக்கதைஏ. ஆர். எம் ரசீம்
இசைசி. சுதர்சன்
நடிப்புகஜன், வசந்த், உமேஸ்,
ஒளிப்பதிவுஎம். ஏ. கபூர், எஸ். பாலா
வெளியீடுசெப்டம்பர் 30, 2011
நாடுஇலங்கை
மொழிதமிழ்

ஒரே நாளில்... என்பது இலங்கையில் தயாரிக்கப்பட்டு 2011 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட முழுநீளத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனைத் தயாரித்து இயக்கியவர் இலங்கையைச் சேர்ந்த புதுமுக இயக்குனர் ஏ. ஆர். எம். ரசீம். அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.[1]

பாடல்களை இயக்குனர் ரசீம், உதவி இயக்குனர் பி. சிவகாந்தன், யாழ்ப்பாணக் கவிஞர் உதயகுமார் ஆகியோர் எழுதியிருந்தனர். சி. சுதர்சன் இசையமைத்திருக்கிறார்.

பின்னணிப் பாடகர்கள்[தொகு]

  • ஆர். குளோரி
  • மனோஜ்
  • விசாந்தினி

சிறப்புத் தகவல்கள்[தொகு]

  • இத்திரைப்படம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட 29வது தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1]
  • 20 ஆண்டுகளுக்குப் பின்னர் முழுமையாக இலங்கைக் கலைஞர்களைக் கொண்டு இலங்கைக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட முதலாவது திரைப்படம் இது.
  • இத்திரைப்படத்தில் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த பல கலைஞர்கள் நடித்துள்ளனர். ஆனாலும் திரைப்படத்தில் அவர்களது பிரதேச ரீதியிலான பேச்சு அல்லாமல், தென்னிந்தியத் திரைப்படங்களில் பேசப்படும் இந்திய சினிமாத் தமிழே பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "நம்நாட்டுப் படைப்பான ~ஒரே நாளில்' பவனி வருகிறது தங்கத் தேரில்!". தினகரன் (16 ஒக்டோபர் 2011). பார்த்த நாள் 17 ஆகத்து 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரே_நாளில்&oldid=2789012" இருந்து மீள்விக்கப்பட்டது