ஒப்பீட்டு வலிமை குறியீடு
ஒப்பீட்டு வலிமை என்பதை அறிய இங்கு செல்லவும்.
ஒப்பீட்டு வலிமை குறியீடு (Relative Strength Index) என்பது ஜே. வெல்ஸ் வில்டர் உருவாக்கிய ஒரு தொழினுட்பப் பகுப்பாய்வுக் (நுட்பப் பகுப்பாய்வு) கருவி ஆகும். இந்த தொழினுட்பப் பகுப்பாய்வு (Technical Analysis) மூலம் ஒரு பங்கின் விலையில் உள்ள ஏற்றத் தாழ்வுகளின் வேகங்களைக் (momentum oscillator) கொண்டு அந்தப் பங்கினை ஆய்வு செய்வதாகும். இதன் மதிப்பு பூஜியத்தில் இருந்து நூறு வரை வேறுபடும். பொதுவாக ஒப்பீட்டு வலிமை குறியீடு 70 அல்லது அதற்கு மேல் சென்றால் அந்தப் பங்கு, அதன் மதிப்பிற்கும் அதிகமாக (overbought) வாங்கப்பட்டதாகவும், 30ஐ விடக் குறைவாக இருந்தால் அதன் மதிப்பிற்கும் குறைவாக வாங்கப்பட்டதாகவும் (oversold) கொள்ளப்படுகிறது. எனவே ஒரு பங்கினை வாங்கும் பொழுது அதன் ஒப்பீட்டு வலிமை குறியீடு 30ஐ விடக் குறைவாக இருந்தால் அப்பங்கு வாங்குவதற்கு உகந்தது என்றும் 70 அல்லது அதற்கு மேல் சென்றால் விற்பதற்கு உகந்தது என்றும் கொள்ளவேண்டும்.[1]
Relative Strength Index என்பது Relative Strength அல்ல. இரண்டும் முற்றிலும் வேறு.
மேற்கோள்
[தொகு]- ↑ Online. https://www.fidelity.com/learning-center/trading-investing/technical-analysis/technical-indicator-guide/RSI (பார்த்த நாள் 13/12/2017).
{{cite book}}
: External link in
(help)|title=