ஒன்று இரண்டாகப் பிரிதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒன்று இரண்டாகப் பிரிதல் அல்லது பிளவுறல் (One Divides into Two) முரண்பாடு (一分为二) என்பது 1964 இல் சீனாவில் நடந்த ஓரமைப்பின் அல்லது நிகழ்வின் முரண்பாட்டின் இயல்பு குறித்த கருத்தியல் விவாதமாகும். இந்தக் கருத்துப்படிம்ம் அல்லது எண்ணக்கரு இலெனினின் மெய்யியல் குறிப்பேடுகள் நூலில் முதலில் குறிப்பிடப்படுவதாகும்.. யாங் சியான்ழேன் எனும் சீன மெயியலாளர் இரண்டு ஒன்றாக இணைதல் எனும் எண்ணக்கருவை உருவாக்கி, இது தான் இணைமுரணியலின் அல்லது இயங்கியலின் முதன்மையான விதி என்றார்.. இதை மாவோயியர்கள் ஈசாப்பியப் பொருளில் விளக்கி, முதலாளியம் சமவுடைமையுடன் ஒருங்கலாம் என வாதிடலாயினர். யாங் மீது முதலில் எதிர்ப்புக் கணையை வீசியவர் ஐ. சிக்கி ஆவார். இவ்வெதிர்ப்பில் இவருடன் மாவோவும் இணைந்துகொண்டார். மேலும் வாங் உருவோழ்சூயியும் இவ்வெதிர்ப்பில் பங்களித்தார்.. எனினும் 1976 க்குப் பின்னர் யாங் மீளவேற்கப்பட்டதோடு இரண்டு ஒன்றாக இணைதல் கருத்துப்படிமமும் ஏற்கப்பட்டது.

இந்தச் சொற்றொடர்/எண்ணக்கரு மெய்யியல் குறிப்பேடுகள் எனும் நூலில் இலெனின் உருவாக்கிய எண்ணவோட்டத்தில் இருந்து பெற்றதாகும். “தனி முழுமை பிளவுறலும் அதன் பிளவுற்ற முரண்பகுதிகளை அறிந்திடலும் தான் இணைமுரணியலின் சாரமாகும்.”

வெளி இணைப்புகள்[தொகு]