உள்ளடக்கத்துக்குச் செல்

குடியியற் சட்டமறுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஒத்துழையாமை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குடிசார் சட்டமறுப்பு, அல்லது ஒத்துழையாமை, என்பது ஒருவரின் உள்ளுணர்வுக்கு அல்லது மனச்சாட்சிக்கு எதிரானது என ஒருவர் கருதும் அரச சட்டங்களையும் செயற்பாடுகளையும் குடிசார் முறையில் முயன்று மறுப்பது அல்லது எதிர்ப்பது ஆகும். சட்ட மறுப்பு என்ற எதிர்ப்புப் போராட்ட வடிவம் ஓர் அறப்போராட்ட வடிவமாகவே கருதப்படுகிறது.

வரலாறு

[தொகு]

குடிசார் சட்டமறுப்பு என்பது கென்றி டேவிட் தூரோ அவர்கள் 1849 ஆம் ஆண்டு எழுதிய ஒரு ஆங்கிலக் கட்டுரை ஆகும். இதன் ஆங்கிலத் தலைப்பு Resistance to Civil Government (Civil Disobedience) என்பது ஆகும். அரசு தனிநபர்களின் உள்ளுணர்வுக்கு அல்லது மனச்சாட்சிக்கு எதிராக சட்டமியற்றுவதை ஏற்றுக் கொள்ளக் கூடாது எனவும், அரசின் அநீதிகளுக்கு எதிர்ப்புக் காட்டாமல் துணை போவதைத் தவிர்ப்பது ஒருவரின் கடமை எனவும் தூரோ வாதிடுகிறார்.

காந்தி பிரித்தானியாவின் காலனித்துவ சட்டங்கள் சிலவற்றை மறுத்தது, ரோசா பாக்ஸ் அமெரிக்க இன்வாத சட்டங்களை மறுத்தது ஆகியவை சட்ட மறுப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.

இவற்றையும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடியியற்_சட்டமறுப்பு&oldid=3741564" இலிருந்து மீள்விக்கப்பட்டது