ஒட்டுநிலை (மொழியியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலக்கண நூலார் பகுதி என்று கூறுவதை மொழி நூலார் அடிச்சொல் என்பர். இத்தகைய அடிச்சொற்கள் இரண்டு இணையும் போது அவற்றுள் ஒன்று சிதையாமல் இருக்க மற்றொன்று சிதைந்து விடும். இவ்வாறு அடிச்சொற்கள் இணைந்த நிலையை ஒட்டுநிலை (Agglutination) என்பர்.

எடுத்துக்காட்டு: அறி+த்(ந்)+த்+ஆன்=அறிந்தான்.

உலகில் பெரும்பான்மையான மொழிகள் ஒட்டுநிலையைச் சார்ந்தே வருவன. சித்திய மொழி, திராவிட மொழிகள், சப்பானிய, கொரிய, பினிஷிய, பாஸ்க் மொழிகளும் தென் ஆப்பிரிக்கா ,ஆஸ்திரேலிய பழங்குடியினரின் மொழிகளும் இவ்வகை மொழிகளேயாகும்.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒட்டுநிலை_(மொழியியல்)&oldid=2078665" இருந்து மீள்விக்கப்பட்டது