ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்ற கட்டடம்

ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்றம் என்பது கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூர் நகரில் உள்ள ஒரு தமிழ் அமைப்பு ஆகும்.[1]

வரலாறு[தொகு]

இம் மன்றம் 1974இல் துவக்கப்பட்டது என்றாலும் முறையாகப் பதிவு செய்யப்பட்டது 1987இல் ஆகும். (பதிவு எண் 45/87)[2]

செயல்பாடுகள்[தொகு]

இம் மன்றத்தின் சார்பில் ஒவ்வோராண்டும் தமிழ்ப் புத்தாண்டு விழா சிறப்பாக கொண்டாடப் பட்டுவந்தது. தமிழ்ப் புத்தாண்டு அன்று கவியரங்கம், வழக்காடு மன்றம், பட்டிமன்றம், இசை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட்டன.

அமைவிடம்[தொகு]

இம்மன்ற அலுவலகம் ஒசூர் தொடர்வண்டி சாலையில் உள்ள பெரியார் நகரில் தனது சொந்தக் கட்டடத்தில் இயங்கிவருகிறது.

மேற்கோள்[தொகு]

  1. http://www.dinamani.com/edition_vellore/article1010281.ece
  2. ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்றம் வெள்ளி விழா மலர் 1998