ஒசூர் காளிகாம்பாள் காமாட்சீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காளிகாம்பாள் காமாட்சீசுவரர் கோயில் பக்கவாட்டுத் தோற்றம்
கோயிலின் இராசகோபுரம்

ஒசூர் காளிகாம்பாள் காமாட்சீசுவரர் கோயில் என்னும் கோயில் தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூர் சந்திர சூடேசுவரர் கோயில் மலைக் கோயில் உள்ள குன்றில் உள்ள ஒரு கோயிலாகும். இக்கோயில் சந்திர சூடேசுவரர் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் சாலை ஓரத்திலேயே உள்ளது.

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம் கொண்டு அமைந்துள்ளது. கோயிலில் ஒரு குளமும் அமைந்துள்ளது. கருவறையில் கிழக்கு நோக்கி காமாட்சீசுவரர் லிங்கவடிவில் உள்ளார். பின்புறத்தில் காளிகாம்பாள் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இக்கோயிலுக்கு அண்மையில் இராச கோபுரம் கட்டப்பட்டது.

கோயிலின் பழமை[தொகு]

இக்கோயில் மிகவும் பழமைவாய்ந்த கோயிலாகும். இக்கோயிலின் பழமைக்குச் சான்றாக இக்கோயிலின் வெளிப்புறச் சுவரில் போசள மன்னன் மூன்றாம் வீர வல்லாளன் காலத்தைச் சேர்ந்த கி.பி. 1325 ஆண்டைய கல்வெட்டு காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஒசூர் அருள்மிகு சந்திர சூடேசுவர் ஓர் ஆய்வு, இரா. இராமகிருட்டிணன்.பக்.27