ஒசாக்கா கோட்டையகம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. (Oct 2014) |
ஒசாக்கா கோட்டையகம் நிப்பான் நாட்டின் ஒசாக்கா மாநிலத்தின் ஒசாக்கா நகரில் உள்ளது. ஒசாக்கா கோட்டையகம் சப்பானில் உள்ள புகழ்பெற்ற கோட்டைமனைகளுள் ஒன்று. பதினாறாம் நூற்றாண்டில் சப்பான் ஒருங்கிணைக்கப்படுவதற்கு இக்கோட்டைமனையின் பங்கு குறிப்பிடத்தக்கது. இதனுடைய பரப்பு ஏறக்குறைய ஒரு சதுரகிலோமீட்டர் ஆகும். இது வெளியில் ஐந்து அடுக்குகளையும் உள்ளே எட்டு அடுக்குகளையும் கொண்டது. தற்காலத்தில் இது பொதுமக்கள் பார்வையிடவும் அனுமதிக்கப் பட்டுள்ளது.