ஐலா கீட்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஐலா கீட்டோ (Aila Inkeri Keto, பிறப்பு: மார்ச் 14, 1943) ஆத்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மழைக்காடுகள் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனரும், அதன் தலைவரும் ஆவார். இவ்வமைப்பு இப்போது ஆத்திரேலிய மழைக்காடுகள் பாதுகாப்பு அமைப்பு என அழைக்கப்படுகிறது. இவர் ஆத்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பிறந்தவர்.[1] உயிர் வேதியியல் படிப்பை முடித்து குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார்.[2] இவர் 1994, 2000, 2001 ஆம் ஆண்டுகளில் ஆத்திரேலியாவில் விருதுகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.[3] 2005 ஆம் ஆண்டு வால்வோ சுற்றுச்சூழலியல் விருது (Volvo Environment Prize) இவருக்கு வழங்கப்பட்டது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Keto, Aila Inkeri (1943 - )". Bright Sparcs Biographical entry. பார்த்த நாள் 2008-02-29.
  2. Williams, Christine (2006). Green power: Environmentalists who have changed the face of Australia, Lothian Books, pp. 87-96.
  3. "It's an Honour". Australian Government. பார்த்த நாள் 2008-02-28.
  4. "Volvo awards protection of biodiversity". Volvo Environment Prize. மூல முகவரியிலிருந்து 2008-01-08 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-02-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐலா_கீட்டோ&oldid=2479405" இருந்து மீள்விக்கப்பட்டது