ஐபோன் 6

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் (The iPhone 6 and iPhone 6 Plus) ஆகியவை ஆப்பிள் இன்க் வடிவமைத்து விற்பனை செய்த திறன்பேசிகள் ஆகும். இது ஐபோன் வரிசையில் எட்டாவது தலைமுறை ஆகும் ஐபோன் 5S இன் வெற்றியினைத் தொடர்ந்து செப்டம்பர் 19, 2014 அன்று அறிவிக்கப்பட்டு செப்டம்பர் 9, 2014 வெளியிடப்பட்டது. ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் பெரிய 4.7 மற்றும் 5.5 அங்குலங்கள் (120 மற்றும் 140 mm) காட்சிகள், வேகமாக செயலிகள் இயங்கும் திறன், மேம்படுத்தப்பட்ட கேமராக்கள், மேம்படுத்தப்பட்ட எல்.டி.இ மற்றும் வைஃபை இணைப்பு போன்றவைகள் இதில் இடம்பெற்றன.[1][2]

ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றன, அவற்றின் மறுவடிவமைப்பு, விவரக்குறிப்புகள், கேமரா மற்றும் பேட்டரி ஆயுள் குறித்து விமர்சகர்கள் முந்தைய ஐபோன் மாடல்களை விட மேம்பட்டு இருப்பதாகத் தெரிவித்தனர். ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸின் முன்பதிவு அனுமதி கிடைத்த முதல் 24 மணி நேரத்திற்குள் நான்கு மில்லியன் முன்பதிவுகளைத் தாண்டியது-இது ஆப்பிள் நிறுவனத்தின் மற்ற சாதனங்களுக்கு இல்லாத முன்பதிவு அளவு ஆகும்.[3] முதல் மூன்று நாட்களில் பத்து மில்லியனுக்கும் அதிகமான ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் சாதனங்கள் விற்கப்பட்டதன் மூலம் அதிகம் விற்பனையான ஆப்பிள் சாதனமாகக் கருதப்பட்டது.[4] மொத்தமாக, ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் திறன்பேசிகள் மொத்தம் 220 மில்லியன்கள் விற்றன, இது இதுவரை அதிக விற்பனையான ஐபோன் மாதிரியாகவும், இன்றுவரை மிகவும் வெற்றிகரமான தொலைபேசிகளாகவும் திகழ்கிறது .

நேர்மறையான வரவேற்பு இருந்தபோதிலும், ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் பல வன்பொருள் சிக்கல்களுக்கு உட்பட்டுள்ளன,

வரலாறு[தொகு]

ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஐபோன் 4 எஸ் வரை, ஐபோன்கள் 3.5 அங்குல காட்சிகளைப் பயன்படுத்தின - அவை மற்ற நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் திரைகளை விட சிறியவை. ஐபோன் 5 மற்றும் அதன் பிறகான திறன்பேசிகள் சற்று நீளாமான திரை அளவினைக் கொண்டிருந்தன. சந்தைப் பங்கில் ஆப்பிள் தனது மதிப்பினை இழந்ததைத் தொடர்ந்து, ஜனவரி 2014 ஐபோன் மாதிரிகள் பெரிய, 4.7 அங்குல மற்றும் 5.5 அங்குல டிஸ்ப்ளேக்களுடன் அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகின [5][6][7]

ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் ஆகியவை செப்டம்பர் 9, 2014 அன்று கலிபோர்னியாவின் குபேர்டினோவில் உள்ள பிளின்ட் சென்டர் ஃபார் பெர்ஃபாமிங் ஆர்ட்ஸில் செப்டம்பர் 19, 2014 அன்று ஒரு பத்திரிகையாளர் நிகழ்வின் போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன முன்பதிவுகள் செப்டம்பர் 12, 2014 அன்று தொடங்கியது, ஐபோன் 6, 649 அமெரிக்க டாலர்களிலும், ஐபோன் 6 பிளஸ் 749 அமெரிக்க டாலர்களிலும் விற்பனைக்கு வந்தது.[8] சீனா தவிர ஏனைய நாடுகளில் இந்த ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ஐ வெளியனது. சீன அரசின் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த திறன்பேசிகளின் விற்பனைக்கு அனுமதி வழங்காத காரணத்தினால் சீனாவில் விற்பனை ஆகவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன, மேலும் அந்த ஆண்டின் தொடக்கத்தில் சீன மத்திய தொலைக்காட்சியின் செய்தி அறிக்கையானது ஐபோன் சாதனங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக குற்றம் சாட்டியது, ஏனெனில் iOS 7 இன் இருப்பிடங்கள் வசதியானது மாநில ரகசியங்களை அம்பலப்படுத்தக்கூடும் என நினைத்தது.[9][10]

சான்றுகள்[தொகு]

  1. Seifert, Dan (September 9, 2014). "iPhone 6 announced: 4.7-inch display, A8 processor, 8-megapixel camera, available September 19th for $199". The Verge (Vox Media). https://www.theverge.com/2014/9/9/6122731/iphone-6-apple-4-7-inch-display-announced. பார்த்த நாள்: August 4, 2015. 
  2. Franzen, Carl (September 9, 2014). "iPhone 6 Plus with 5.5-inch display announced". The Verge (Vox Media). https://www.theverge.com/2014/9/9/6121705/apple-iphone-6-5-5-inch-display-announced. பார்த்த நாள்: September 9, 2014. 
  3. Apple Inc.(September 15, 2014). "Apple Announces Record Pre-orders for iPhone 6 & iPhone 6 Plus Top Four Million in First 24 Hours". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: September 16, 2014.
  4. Warren, Tom (September 22, 2014). "Apple sells 10 million iPhones in opening weekend record". The Verge (Vox Media). https://www.theverge.com/2014/9/22/6826347/iphone-6-opening-weekend-sales-figures. பார்த்த நாள்: August 4, 2015. 
  5. "Apple iPhones to Come Out With Bigger Screens". Wall Street Journal. January 24, 2014. https://www.wsj.com/news/articles/SB10001424052702304856504579338611620927036. பார்த்த நாள்: September 9, 2014. 
  6. "Apple Readies a Big Bet on Big-Screen Phones". Wall Street Journal. September 9, 2014. https://www.wsj.com/articles/apple-suppliers-gear-up-for-large-screen-iphones-1405985788. பார்த்த நாள்: September 9, 2016. 
  7. "iPhone 5: a little bit taller, a little bit baller". Ars Technica. September 9, 2014. பார்க்கப்பட்ட நாள் September 9, 2014.
  8. "iPhone 6 release date September 19th, prices start at $199 for 4.7-inch on contract, $299 for 5.5-inch on contract". Vox Media. September 9, 2014. https://www.theverge.com/2014/9/9/6121325/apple-iphone-6-release-date-pricing. பார்த்த நாள்: September 12, 2014. 
  9. "Release of iPhone 6 Delayed in China". New York Times. September 10, 2014. https://www.nytimes.com/2014/09/11/business/international/release-of-iphone-6-delayed-in-china.html?_r=0. பார்த்த நாள்: September 12, 2014. 
  10. "Apple denies iPhones are 'a national security threat' to China". The Guardian. July 14, 2014. பார்க்கப்பட்ட நாள் September 12, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐபோன்_6&oldid=2867736" இலிருந்து மீள்விக்கப்பட்டது