ஐதரசைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாரா-தொலுயீன் சல்போனைல் ஐதரசைடு

ஐதரசைடுகள் (Hydrazides) என்பவை கரிம வேதியியலில் ஒரு வகையான கரிமச் சேர்மங்களாகும். பொதுவான ஒரு வேதி வினைக்குழுவை இவை பகிர்ந்துகொள்கின்றன. இப்பகிர்வில் ஒரு நைட்ரசன் நைட்ரசன் சகபிணைப்புடன் நான்கு பதிலிகளைக் கொண்டிருக்கும். இவற்றில் E(=O)-NR-NR2றைந்தபட்சம் ஒரு அசைல் குழு இருக்கவேண்டும் [1]. ஐதரசைடுகளுக்கான பொதுக் கட்டமைப்பு வாய்ப்பாடு E(=O)-NR-NR2 ஆகும். இங்குள்ள R'கள் பொதுவாக ஐதரசனாகத்தான் இருக்கும் [1]. ஆக்சிசனுடன் இணைக்கப்பட்டுள்ள அணுவைப் பொறுத்து ஐதரசைடுகளை மேலும் வகைப்படுத்த முடியும் [1] The related hydrazines do not carry an acyl group.[2]. கார்போ ஐதரசைடுகள் (R-C(=O)-NH-NH2), சல்போ ஐதரசைடுகள் (R-S(=O)2-NH-NH2) மற்றும் பாசுபோனிக் டை ஐதரசைடுகள் (R-P(=O)(-NH-NH2)2 என்பவை பிற வகைகளாகும். தொடர்புடைய ஐதரசீன் சேர்மங்கள் அசைல் குழுக்களைப் பெற்றிருப்பதில்லை. பாரா-தொலுயீன்சல்போனைல் ஐதரசைடு போன்ற சல்போனைல் ஐதரசைடுகள் இவ்வகைச் சேர்மங்களில் மிகவும் முக்கியமான சேர்மங்களாகும். கரிம வேதியியலில் இவை சாப்பிரோ வினை [3] மற்றும் எசுசென்மோசர்-தானாபி துண்டாக்கும் வினை போன்ற வினைகளில் இச்சேர்ம்ம் ஒரு பயனுள்ள வினையாக்கியாகப் பயன்படுகிறது [4][5]. டோசில் குளோரைடை ஐதரசீனுடன் சேர்த்து வினைபுரியச் செய்து இவ்வினையாக்கியை தயாரிக்க முடியும் [6].

மேற்கோள்கள் =[தொகு]

  1. 1.0 1.1 1.2 தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "Hydrazides". Compendium of Chemical Terminology Internet edition.
  2. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "Hydrazines". Compendium of Chemical Terminology Internet edition.
  3. Robert H. Shapiro (1976). "Alkenes from Tosylhydrazones". Org. React. 23 (3): 405-507. doi:10.1002/0471264180.or023.03. 
  4. Schreiber, J.; Felix, D.; Albert Eschenmoser; Winter, M.; Gautschi, F.; Schulte-Elte, K. H.; Sundt, E.; Günther Ohloff et al. (1967). "Die Synthese von Acetylen-carbonyl-Verbindungen durch Fragmentierung von α-β-Epoxy-ketonen mit p-Toluolsulfonylhydrazin. Vorläufige Mitteilung" (in German). Helv. Chim. Acta 50 (7): 2101–2108. doi:10.1002/hlca.19670500747. 
  5. Masato Tanabe; Crowe, David F.; Dehn, Robert L. (1967). "A novel fragmentation reaction of α,β-epoxyketones the synthesis of acetylenic ketones". Tetrahedron Lett. 8 (40): 3943–3946. doi:10.1016/S0040-4039(01)89757-4. 
  6. Friedman, Lester; Litle, Robert L.; Reichle, Walter R. (1960). "p-Toluenesulfonylhydrazide". Organic Syntheses 40: 93. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv5p1055. ; Collective Volume, 5, p. 1055
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதரசைடு&oldid=3424834" இருந்து மீள்விக்கப்பட்டது