உள்ளடக்கத்துக்குச் செல்

ஐசோநேந்த்ரா லான்சியொலாட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐசோநேந்த்ரா லான்சியொலாட்டா (Isonandra lanceolata) என்பது சாபோடேசியே தாவரவியல் குடும்பத்தை சேர்ந்த தாவரமாகும். இது புதர்ச்செடி வகை அல்லது சிறு மரமாக 26 மீட்டர் (90 அடி) உயரம் வரை வளரக்கூடியது.[1][2][3] இதன் நடுமரப்பகுதி 46 செ.மீ (18 இன்ச்) விட்டம் கொண்டது. தண்டுப்பகுதி சாக்லேட் பழுப்பு நிறம் கொண்டது. இதன் பூங்கொத்தில் 10 எண்ணிக்கையிலான இளம் மஞ்சள் நிறப்பூக்களைக் கொண்டிருக்கும். லான்சியோலாட்டா என்பது லத்தீன் மொழிச் சொல்லாகும். இதற்கு கோள வடிவம் என்று பொருள். இது இலைகளின் வடிவைக் குறிக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் (6600 அடி) உயரத்திலுள்ள காடுகளில் வளரக்கூடியது. இத்தாவர இனம் தென் இந்தியா, இலங்கை மற்றும் போர்னியோ ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Isonandra lanceolata". The Plant List. Retrieved 27 October 2013.
  2. "Isonandra lanceolata – Sapotaceae". BIOTIK. Archived from the original on 6 ஆகத்து 2019. Retrieved 24 November 2014.
  3. Dassanayake, M. D. (1995). A Revised Handbook to the Flora of Ceylon Vol. IX. New Delhi: Amerind. pp. 383–387.
  4. Julaihi, L. C. J. (April 2002). "Isonandra lanceolata Wight" (PDF). In Soepadmo, E.; Saw, L. G.; Chung, R. C. K. (eds.). Tree Flora of Sabah and Sarawak. (free online from the publisher, lesser resolution scan PDF versions). Vol. 4. Forest Research Institute Malaysia. p. 220. ISBN 983-2181-27-5. Retrieved 27 October 2013.