ஏ. ஏ. ஜின்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ.ஏ. ஜின்னா (A.A. Jinnah) (16 பிப்ரவரி 1941) இந்திய அரசியல்வாதி ஆவார். திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக இவர் 2008 ஆண்டு மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிறப்பும் குடும்பமும்[தொகு]

16 பிப்ரவரி 1941 ஆம் ஆண்டு முஹம்மது சுலைமான் - கதீஜா பீவி தம்பதியருக்கு மகனாக திருவாரூரில் பிறந்தார். திருமதி சுபைதா பேகம் என்பவரை 1969 ஆம் ஆண்டு மணந்தார், இவருக்கு மூன்று பெண் குழந்தைகளும், ஒரு மகன் மற்றும் மூன்று மகள்களும் உள்ளனர். [1]

கல்வி[தொகு]

சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ பட்டம் பெற்ற இவர், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார்.

மாநிலங்களவை உறுப்பினர்[தொகு]

03/04/2008 முதல் 02/04/2014 வரை திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டார்.

வகித்த பொறுப்புகள்[தொகு]

  • 1967 - 70 சட்ட ஆலோசகர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்
  • 1996 - 1998 சென்னை துறைமுகம் அறங்காவலர்
  • திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞராக பத்து ஆண்டுகள்
  • 2004-2006 தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டுக் கழகம் உறுப்பினர்.
  • தொலைபேசி ஆலோசனைக் குழு உறுப்பினர்
  • தணிக்கை வாரியம், இந்திய அரசு
  • 2009 முதல் இரசாயனங்கள் மற்றும் உரங்களுக்கான குழு உறுப்பினர்
  • ஆகஸ்ட் 2008 - மே 2009 உறுப்பினர், வெளிவிவகார அமைச்சின் ஆலோசனைக் குழு
  • டிசம்பர் 2008 முதல் உறுப்பினர் தேங்காய் மேம்பாட்டு வாரியம்
  • நவம்பர் 2010 முதல் உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் குழு உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்ட உறுப்பினர்
  • பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழு
  • ஆகஸ்ட் 2012 முதல் இரசாயனங்கள் மற்றும் உரங்கள் பற்றிய குழு உறுப்பினர்.

மிசா[தொகு]

1976 ஆம் ஆண்டு மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. மாநிலங்களவை உறுப்பினர் விபரம் [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "- மாநிலங்களவை உறுப்பினர் விபரம்". Archived from the original on 2020-06-05. பார்க்கப்பட்ட நாள் 2020-06-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஏ._ஜின்னா&oldid=3546473" இலிருந்து மீள்விக்கப்பட்டது