ஏவல் நிரலாக்கம்
Jump to navigation
Jump to search
கணினியியலில் ஏவல் நிரலாக்கம் என்பது தொழிற்துறையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு நிரலாக்க கருத்தோட்டம் (programming paradigm) ஆகும். ஏவல் நிரலாக்கம் கணினியில் ஒரு நிரல் எப்படிச் செயற்பட வேண்டும் என்பதை படிப்படியாக நிரல் கூற்றுக்கள் ஊடாக விபரிக்கும். ஒவ்வொரு நிரல் கூற்றும் நிரலின் நிலையை (state) மாற்றக் கூடும்.
ஏவல் நிரலாக்கம் என்ற சொல் அறிவிப்பு நிரலாக்கத்தோடு ஒப்பிட்டுப் பயன்படுத்தப்படுகிறது. அறிவிப்பு நிரலாக்கத்தில் ஒரு நிரல் என்ன செய்ய வேண்டும் என்று விபரிக்கப்படும். ஆனால், எப்படிச் செய்ய வேண்டும் என்று விபரிக்கப்படமாட்டாது.