உள்ளடக்கத்துக்குச் செல்

ஏழு விரயங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏழு விரயங்கள் (The seven wastes) என்பது பொதுவாக தொழிற்சாலை மற்றும் சேவைமையங்களில் அன்றாடம் நிகழக்கூடிய விரயங்களாகும். இவை டோயொட்டா நிறுவனத்தின் முன்னாள் முதன்மைப் பொறியாளரான "டாய்ச்சி ஓஹ்னோ" என்பவரால் அடையாளம் காணப்பட்டு டோயொட்டா உற்பத்தி முறைமையின் ஒரு முக்கிய அங்கமாக்கப்பட்டன.

பொருட்கள் உற்பத்தி செய்யப்படும்போது, பலவகையான செய்முறைகள் மற்றும் இணைப்புகளால் அவற்றின் மதிப்பு கூட்டப்படுகிறது. இவ்வாறு மதிப்பு கூட்டப்படும்போது பலவகையான வளங்களும், விரயங்களும் நுகரப்படுகின்றன. இதனால் செலவுகள் அதிகமாகின்றன. நிறுவனங்கள் இச்செலவுகளை ஈடு செய்ய அதிக விலைக்கு வாடிக்கையாளர்களுக்கு பொருள்களை விற்க முனையும், ஆனால் சந்தையில் உள்ள போட்டியினால் அவ்வாறு செய்யக்கூடிய பொருள்கள் விற்பனையாகாமல் தேங்கிவிடும்; அல்லது முதலீட்டை விட குறைந்த விலைக்கு விற்கும்போது அந்நிறுவனங்கள் மிகப்பெரிய இழப்பை ஏற்கக்கூடும்.

இதை தவிர்ப்பதற்காக, விரயங்கள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்படுகின்றன. இவ்விரயங்கள் ஏழு வகைகளாக பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளன:

  1. அதிகப்படியான உற்பத்தி
  2. அதிகப்படியான நகர்வு (இயந்திரத்தினுடைய அல்லது இயந்திர இயக்குனருடைய)
  3. காத்திருப்பு (இயந்திரத்தினுடைய அல்லது இயந்திர இயக்குனருடைய)
  4. தேவையற்ற ஊர்வு (செயல்களுக்கு இடையில் பொருள்களின் தேவையற்ற ஊர்வு)
  5. அதிகப்படியான செயல் முறை
  6. அதிகப்படியான இருப்பு (உற்பத்திக்கான மூலப்பொருள் அல்லது உற்பத்தியில் முழுமையடைந்த பொருள்)
  7. திருத்தம் (மறு சீர் செய்தல்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏழு_விரயங்கள்&oldid=1401164" இலிருந்து மீள்விக்கப்பட்டது