ஏழு அரசுகள் (இங்கிலாந்து)
ஏழு அரசுகள் அல்லது ஹெப்டார்க்கி (Heptarchy) என்பது பிரித்தானியாவில் உருவான ஆங்கிலோ சாக்சானிய அரசுகளின் குழுப்பெயராகும். இடைக்காலப் பிரித்தானியாவில் ஆங்கிலோ சாக்சன்கள் படையெடுத்தபின் பல சிறு அரசுகள் தோன்றின அவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டிருந்தன. நாளாக நாளாக அவைகளில் ஒன்றோடொன்று இணைந்தோ அல்லது வெற்றி கொள்ளப்பட்டோ பெரும் அரசுகளாக உருவெடுத்தன. அவ்வாறு உருவான ஏழுஅரசுகளே ஹெப்டார்க்கி என்று அழைக்கப்பட்டன.[1] ஹெப்டார்க்கி என்பது பிரிட்டானியர்களின் அரசுகளில் ஒன்று மற்றொன்றின் மேல் ஆதிக்கம் செலுத்துவதைக் குறிக்கும் சொல்லாகும். பதினாறாம் நூற்றாண்டு வரை ஏழு அரசுகள் இச்சொல் இவ்வரசுகளைக் குறிக்கப் பயன்பட்டது. ஆனால் 12 ஆம் நூற்றாண்டிலேயே இது ஆங்கிலோ சாக்சானிய அரசைக் குறிக்கப்பயன்பட்டதாகக் கூறுவர்.[2]
ஏழு அரசுகளின் பெயர்கள்[தொகு]
- நார்த்தும்பியா
- மெர்சியா
- கென்ட்
- வெசக்சு
- சசெக்சு
- எசெக்சு
- கிழக்கு ஆங்கிலியா
Kingdom of Wessex
Kingdom of Northumbria
Kingdom of Kent
Kingdom of East Anglia
Kingdom of Essex
Kingdom of Sussex
Kingdom of Mercia
மேற்கோள்கள்[தொகு]
- ↑ நா. ஜெயபாலன், 'இங்கிலாந்து வரலாறு- அரசியலமைப்பு வரலாறுடன்', மோகன் பதிப்பகம், சென்னை 1986. பக்கம் 9,10
- ↑ Historia Anglorum: the history of ... - Google Books. Books.google.com.au. http://books.google.com.au/books?id=O6U5BTD0-rYC&pg=PR61&dq=heptarchy+historiography#PPA17,M1. பார்த்த நாள்: 2010-04-09.