ஏனாதி சாத்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏனாதி சாத்தன் என்பவன் சாத்தன் கணபதியின் உடன் பிறந்தான் ஆவான், இவன் ஏனாதி சாத்தன், ஏனாதி சாத்தஞ்சாத்தன் என்று அழைக்கப்பட்டான். இவனே வேள்விக்குடிச் செப்பேடுகளின் தமிழ்ப்பகுதியை பாடியவன். ஏனாதி எனும் பட்டம் பெற்றவன். ஆகவே, இதன் மாசாமந்தனுக்கு கீழ் ஒரு படைக்கு தலைவனாயிருத்தல் வேண்டும். பெருவீரனாகிய இத்தலைவன் தமிழ்ப் புலமையுடையவனாகவுமிருந்து பாண்டிய வேந்தர்கள் பலருடைய வரலாறுகளைப் பாடி அச்செப்பேடுகளில் சேர்த்தவன். அறம் புரிந்த அரசனுடைய முன்னோர்கள் வரலாற்றைச் செப்பேடுகளில் வரைந்து வைக்கும் வழக்கத்தை பாண்டிநாட்டில் முதலில் தோற்றுவித்தவன் இவனாவான்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. பாண்டியர் வரலாறு ஆசிரியர்: தி.வை.சதாசிவ பண்டாரத்தார்;வெளியீடு:நாம் தமிழர் பதிப்பகம்;சென்னை-5: பக்கம்:37
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏனாதி_சாத்தன்&oldid=3531514" இலிருந்து மீள்விக்கப்பட்டது