ஏணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு ஏணி

ஏணி என்பது, பொதுவாக குறித்த இடைவெளியில் ஒன்றுக்கு ஒன்று இணையாக வைக்கப்பட்ட இரண்டு நீளமான கம்புகளில், அவற்றுக்குக் குறுக்கே ஒரு முனையில் இருந்து மறு முனை வரை பொருத்தப்பட்ட சிறிய கோல்கள் அல்லது தட்டையான படி போன்ற துண்டுகளை இணைத்து உருவாக்கிய ஓர் அமைப்பு ஆகும். ஓர் இடத்திலிருந்து அதற்கு மேலே அல்லது கீழேயுள்ள இன்னொரு இடத்துக்குச் செல்வதற்கு இது பயன்படுகின்றது. மிகப் பழைய காலத்திலிருந்தே ஏணிகளை மனிதர்கள் பயன்படுத்தி இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. முதலில் உருவாக்கப்பட்ட ஏணிகள் நீண்ட ஒற்றை மரக்கொம்புகள் அல்லது மூங்கில் கழிகளில் குறுக்கே குறுகிய குட்டையான கம்புகளைக் கட்டி உருவாக்கப்பட்டு இருக்கக்கூடும். தற்காலத்திலும் இவ்வாறான ஏணிகள் பயன்பாட்டில் உள்ளன. குறுகிய கழிகள் பலவற்றை அடுக்கடுக்காக வைத்து அவற்றின் ஒத்த முனைகளை இரண்டு கயிறுகளில் தொடுத்து நூலேணிகள் அமைக்கும் வழக்கமும் உண்டு.


ஏணி செய்யப் பயன்படும் பொருட்கள்[தொகு]

முற்காலத்தில், மரம், மூங்கில் போன்ற பொருட்களே ஏணி செய்வதற்குப் பயன்பட்டன ஆயினும், அண்மைக் காலங்களில் வேறு பல பொருட்களையும் இதற்குப் பயன்படுத்துகின்றனர். 20 ஆம் நூற்றாண்டில் அலுமீனியம் ஏணி செய்வதற்குப் பயன்படத் தொடங்கியது. இதன் வலிமை, துருப்பிடிக்காத தன்மை, எடைக் குறைவு, நீடித்து உழைக்கும் தன்மை, தீயில் எரியாத தன்மை, நீரினால் பாதிக்கப்படாமை, முடிப்புப்பூச்சு தேவை இல்லாமை என்பவற்றால், அலுமீனியம் ஏணிகளுக்கு விரும்பப்படும் ஒரு பொருளானது. அண்மைக் காலங்களில் கண்ணாடியிழை நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்தி ஏணிகள் செய்கின்றனர்.

வகைகள்[தொகு]

ஏணிகளில் பல வகைகள் உள்ளன. இவற்றுள் பின்வரும் வகைகள் குறிப்பிடத்தக்கவை.

  • நிலைத்த ஏணிகள்
  • நீட்டத்தக்க ஏணிகள்
  • படி ஏணிகள்
  • படி மேடை ஏணிகள்
  • கூரை ஏணிகள்
  • மடிக்கத்தக்க ஏணிகள்
  • "ஏ" சட்டக ஏணிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏணி&oldid=3416821" இருந்து மீள்விக்கப்பட்டது