ச. இரமேசன்

ச. இரமேசன் (S. Ramesan) இந்தியாவின் கேரளத்தைச் சேர்ந்த கவிஞரும், இலக்கியவாதியும், இதழாளரும் ஆவார். கேரளச் சாகித்திய அகாதமி விருது, ஆசான் நினைவு கவிதை பரிசு உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]1952, பெப்ரவரி 16-ல், கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் வட்டத்தில் பிறந்தார். எம். கே. சங்கரன், பி இலட்சுமி ஆகியோர் இவரது பெற்றோர் ஆவர். இளம் வயதிலேயே இவர் கவிதைகள் எழுதத் தொடங்கினார்.[1] பள்ளிபிரத்துச்சேரி தூய ஜோசப் எல். பி. பள்ளி, வைக்கம் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் கல்வி கற்றார். சேர்த்தலை புனித மைக்கேல் கல்லூரியில் இளநிலை கல்வி பயின்றார். 1970 முதல் 1975 வரை எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் இளங்கலை, முதுகளைப் பட்டப் படிப்பினை முடித்தார். மாத்ருபூமி நாளேட்டில் கவிதை எழுதியுள்ளார். 1976ல் பேராசிரியர் டி பி லலாவினை திருமணம் செய்துகொண்டார். சௌம்யா ரமேசு, சந்தியா ரமேசு ஆகியோர் இந்த இணையரின் மகள்கள் ஆவர்.
விருதுகள்
[தொகு]- செருகாடு விருது - 1999 - கறுத்த குறிப்புகள் (கவிதை)
- சக்தி விருது
- கேரள சாகித்திய அகாடமி விருது[2]
- எ பி களக்காடு விருது
- முலூர் விருது
நூல்கள்
[தொகு]- சிதில சித்ரங்கள்[1]
- மல கயறுன்னவர்
- எனிக்கு ஆரோடும் பகயில்ல (எனக்கு யாரோடும் பகையில்லை)[1]
- அஸ்தி சய்ய
- கலுஷித காலம்
- கறுத்த குறிப்புகள்
- எசு. ரமேசினது கவிதைகள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Well-known Malayalam poet-orator S Ramesan passes away" (in en). Press Trust of India. 13 January 2022 இம் மூலத்தில் இருந்து 14 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220114044415/https://indianexpress.com/article/books-and-literature/s-ramesan-malayalam-poet-orator-passes-away-7720971/.
- ↑ Kerala Sahitya Akademi(28 March 2017). "2015 Kerala Sahitya Akademi Awards". செய்திக் குறிப்பு.