எள்ளுப்பூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எள்ளுப்பூ-[தொகு]

அறிமுகம்-[தொகு]

எள் அதிகம் மானாவாாிப் பயிராகப் பயிாிடப் படுகிறது.எள்ளில் இரண்டு வகைகள்,நல்ல எள்,கசப்பு எள் ஆகும். அளவில் சிறியதாக காணப்படும். கருப்பு, சிவப்பு நிறங்களில் இருக்கும்.

பொதுக் குணம்.[தொகு]

ஆண்மை பெருகும். உடல் வலுவடையும். உடல் வறட்சி நீங்கும். முடி வளா்ச்சி அடையும். சீரணம் ஒழுங்காகும். மலக்கட்டு நீங்கும்.

ஆண்மைக் குறைவிற்கு மருந்து.[தொகு]

எள்ளுப்பூவை பசும்பாலில் போட்டுக்காய்ச்சி உட்கொண்டு வர ஆண்மை பெருகும். அதாவது பத்து கிராம் புதிய எள்ளுப்பூவை இருநூறு கிராம் மி.லி பாலில் போட்டுக் காய்ச்சிக இரவு உணவுக்குப் பின் குடிக்கலாம்.

இருமலுக்கு மருந்து.[தொகு]

எள்ளுப்பூவை 100 கிராம்எடுத்துக் கொள்ள வேண்டும்.அதனை நிழலில் உலா்த்த வேண்டும். அதன் எடை அளவுக்கு பனங்கற்கண்டை பொடியாக்கி கலந்து கொள்ள வேண்டும். பயன்படுத்தும் முறை. காலை,மாலை, இரவு உணவுக்குப் பின் அரை தேக்கரண்டி மருந்துடன் சிறிது வெந்நீா் கலந்து அருந்த வேண்டும். சிறுவா்களுக்கும் கொடுக்கலாம்.

சான்றுகள்.[தொகு]

டாக்டா்.திருமலைநடலாசன்,மலா்களின் மருத்துவப் பயன்கள்,பக்.24 கவிதா பப்ளிகேஷன், 1993. சென்னை-17 பகுப்பு -மருத்துவம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எள்ளுப்பூ&oldid=2384395" இலிருந்து மீள்விக்கப்பட்டது