எல்லெர்மான் குண்டுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எல்லெர்மான் குண்டுகள் (Ellerman bombs) என்பவை ஒரு வகையான நுண்ணிய சூரியப் பிழம்புகள் ஆகும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் பெர்டினாண்ட் எல்லெர்மான்[1] என்பவர் குறிப்பாக சூரிய வெடிப்புகளை தொடர்ந்து ஆய்வு செய்தார் என்பதால், நுண்ணிய இச்சூரியப் பிழம்புகளுக்கு எல்லெர்மான் குண்டுகள் எனப்பெயரிடப்பட்டது. முதன்முதலில் 1917 ஆம் ஆண்டு[2] கட்டுரை ஒன்றில் இவர் இதைப்பற்றி விவரித்துள்ளார். அவை பார்ப்பதற்கு தோராயமாக எதிரெதிர் மின்சுமை கொண்ட இரண்டு நகரும் இழைகளைப் போலத் தோற்றமளிக்கும் என்கிறார். பாய்ந்து செல்லும் இவ்விழைகள் இரண்டும் சூரிய ஒளிமண்டலத்தில் சந்திக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]