எலியொனோரா திரோசா
எலியொனோரா திரோசா | |
---|---|
![]() | |
துறை | வானியற்பியல் |
கல்வி கற்ற இடங்கள் | பலெர்மோ பல்கலைக்கழகம் (இளங்கலை, மூதாய்வர், முனைவர்) |
ஆய்வேடு | விரையூழி காம்மாக்கதிர் வெடிப்புகள்: நெடுவாழ்வு மையப் பொறிச் சான்றும் வான்பொருளாக்கப் படிம விளைவுகளும் (2009) |
கற்கை ஆலோசகர்கள் | [[ஜியோவன்னி பெரிசு பாபியோ இரீலே நீல் கெகிரிசு | doctoral_advisor = ஜியாங்காரியோ குசுமனோ | workplaces = கோடார்டு விண்வெளிப் பறப்பு மையம்]]மேரிலாந்து பல்கலைக்கழகம், கல்லூரிப் பூங்காநகர் |
இணையதளம் eleonoratroja |
எலியொனோரா திரோசா (Eleonora Troja) ஓர் இதாலிய வானியற்பியலாளர் ஆவார். இவர் 2017 இல் GW170817 எனும் ஈர்ப்பலை வாயிலில் இருந்து புதிர்க்கதிர் உமிழ்வைக் கண்டுபிடித்தார்.[1][2][3][4] இவர் மேரீலாந்து பல்கலைக்கழகத்தின் கல்லூரிப் பூங்காவிலும் கோடார்டு விண்வெளிப் பறப்பு மையத்திலும் அறிவியல் இணை ஆய்வாளராக உள்ளார்.
கல்வி
[தொகு]இவர் பலெர்மோ பல்கலைக்கழகத்தில் 2002 இல் இயற்பியலிலும் வானியலிலும் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் ஜியோவன்னி பெரிசு வழிகாட்டுதலில் ஒளியியலாக மெலிந்த வானியற்பியல் மின்ம ஊடகத்தின் எல்லியம் ஒத்த மின்னணுக்களின் புதிர்க்கதிர்வகை கதிர்நிரலியல் எனும் தலைப்பில் தன் ஆய்வை நிகழ்த்தினார். திரோசா 2005 இல் பாபியோ இரீலே வழிகாட்டுதலில் தன் மூதாய்வுப் பட்டத்தை பலெர்மோ பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவரது பட்ட மேற்பட்டப் படிப்பு ஆய்வின் தலைப்பு IC 443 எனும் விண்மீன் மீவெடிப்பு எச்ச முகிலின் XMM-நியூட்டன் நோக்கீடுகள்: அனல் புதிர்க்கதிர் உமிழ்வு என்பதாகும். இவர் ஜியாங்கார்லோ குசுமனோ வழிகாட்டுதலில் வானியலிலும் இய்ற்பியலிலும் தன் முனைவர் பட்டத்தைப் பெற்றார். இவரது முனைவர் பட்ட ஆய்வின் த்லைப்பு விரையூழி காம்மாக்கதிர் வெடிப்புகள்: நெடுவாழ்வு மையப் பொறிச் சான்றும் வான்பொருளாக்கப் படிம விளைவுகளும் .இவர் 2009 ஜூலை முதல் 2012 ஜூலை வரை நீல் கெகிரீசு வழிகாட்டுதலில் கோடார்டு விண்வெளிப் பறப்பு மையத்தில் முதுமுனைவர் ஆய்வை மேற்கொண்டார்.[5]
வாழ்க்கைப்பணி
[தொகு]இவர்கல்லூரி பூங்காவில் உள்ள மேரிலாந்து பல்கலைக்கழகத்திலும் கோடார்டு விண்வெளிப் பறப்பு மையத்திலும் இணை ஆய்வாளராக 2012 ஜூலை முதல் 2013 ஜூலை வரை இருந்துள்ளார்.இவர் 2013 ஜூலையில் கோடார்டு விண்வெளிப் பறப்பு மையத்தில் மீவிரைவு விருந்து தகைமை ஆய்வாளர் திட்டத்தின் தலைமையேற்றார். இவர் 2015 ஜூலையில் கோடார்டு விண்வெளிப் பறப்பு மையத்திலும் மேரிலாந்து பல்கலைக்கழகத்திலும் உதவி ஆராய்ச்சி அறிவியலாளர் ஆனார்.[5]
ஆராய்ச்சி
[தொகு]இவர் உயராற்றல் வானியற்பியலிலும் காம்மாக்கதிர் வெடிப்புகளிலும் ஈர்ப்பலைகள் சார்ந்த மின்காந்தப் பகுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்கிறார். இவர் வாழ்க்கைப்பணி முழுதும் ஈர்ப்பலை வாயில்கள், நொதுமி விண்மீன் இணைவுகள், குறுங்கால GRB க்கள் போன்ற GRB நிகழ்வு சார்ந்த பலவகைகளில் வேறுபடும் கூறுபாடுகளில் தன் ஆய்வுக் கவனத்தைக் குவிக்கிறார்.[5] இவர் 2017 இல் GW170817 எனும் ஈர்ப்பலை வாயிலின் புதிர்க்கதிர் உமிழ்வு அணிக்குத் தலைமையேற்றார்.[1][2][3][4]
இவரது முதன்மை ஆய்வு ஆர்வம் செறிந்த இரும அமைப்பு இணைவுகளின் நோக்கீட்டுப் பதிவுகளில் குவிந்துள்ளது. இந்த இரும அமைப்புகள் இரண்டு நொதுமி விண்மீன்களாகவோ (NS-NS) அல்லது ஒரு நொதுமி விண்மீனும் கருந்துளையும் சார்ந்த்தாகவோ (NS-BH) அமையலாம். இவை ஈர்ப்பலைக் கதிர் ஆற்றல் இழப்புகளால் சுளாகச் சுழன்றபடி நெருங்கி மோதி இணைகின்றன. வளர்நிலை வானியற்பியலின் பல முதன்மைக் கூறுபாடுகளின் வெட்டுமுகமாகக் கீழ்வரும் மூவகைச் செறிந்த இரும அமைப்பு இணைவுகள் உள்ளன:
- இவையே பெரிதும் குறுங்காலக் காம்மாக்கதிர் வெடிப்புகளை உருவாக்குகின்றன;
- இவையே வலிவான ஈர்ப்பலைக் கதிர் வாயில்களாக அமைகின்றன. இவை மேம்பட்ட லிகோ (LIGO), விர்கோ(Virgo) அமைப்புகளால் நேரடியாகக் கண்டறிய முடிந்த முதன்மை உறுப்படிகள் ஆகும்;
- இவையே (தங்கம், பிளாட்டினம், யுரேனியம், …) போன்ற அனைத்து அடர்தனிமங்களை உருவாக்கும் நிகழ்வுக் களங்களாகவும் அமைகின்றன.
இவர் இத்தகைய மூன்றுவகை அடிப்படை ஆய்வுப் புலங்களிலும் ஈடுபடுகிறார்.[5]
தகைமைகளும் விருதுகளும்
[தொகு]திரோயா பின்வரும் விருதுகளைப் பெற்றுள்ளார்:
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Potter, Sean (2017-10-16). "NASA Missions Catch First Light from a Gravitational-Wave Event". NASA. Retrieved 2019-10-13.
- ↑ 2.0 2.1 mewright (2017-10-16). "Neutron Star Merger Directly Observed for the First Time". College of Computer, Mathematical, and Natural Sciences (in ஆங்கிலம்). Archived from the original on 2019-10-13. Retrieved 2019-10-13.
- ↑ 3.0 3.1 "Astronomers Feast on First Light From Gravitational Wave Event". Gemini Observatory (in ஆங்கிலம்). 2017-10-16. Retrieved 2019-10-13.
- ↑ 4.0 4.1 "Chandra Makes First Detection of X-rays from a Gravitational Wave Source: Interview with Chandra Scientist Eleonora Nora Troja". chandra.si.edu. Retrieved 2019-10-13.
- ↑ 5.0 5.1 5.2 5.3 "Bio - Eleonora Troja". science.gsfc.nasa.gov (in ஆங்கிலம்). Archived from the original on 2019-09-24. Retrieved 2019-09-24.
- ↑ "Awards Won - Search Results - Sciences and Exploration Directorate - 600". science.gsfc.nasa.gov. Retrieved 2019-10-13.
- ↑ "UMD Astronomy: 2018 News". www.astro.umd.edu. Retrieved 2019-10-13.
வெளி இணைப்புகள்
[தொகு]- Official website
- எலியொனோரா திரோசா publications indexed by Google Scholar