எலிசபெத்தா பியராசோ
எலிசபெத்தா " பெத்தி " பியராசோ (Elisabetta "Betty" Pierazzo) (1963 - 2011) 2002 முதல் 2011 வரை கோள் அறிவியல் நிறுவனத்தில் மூத்த அறிவியலாளராக இருந்தார்.[1] பியராசோ மொத்தல் குழிப்பள்ளத்தில் புலமை பெற்றவர்.[2] அரிசோனா பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகவும் இருந்தார்.[3]
வாழ்க்கையும் தொழிலும்
[தொகு]எலிசபெத்தா 1963, ஜூலை 4 அன்று இத்தாலியின் நோலேயில் தாய் மரியா சுக்காட்லினுக்கும் தந்தை நெரினோ பியராசோவுக்கும் ஆகியோருக்கு பிறந்தார்.[4] 1989 ஆம் ஆண்டில் பியராசோ தனது சொந்த ஊரான தக்சன் அரிசோனாவுக்கு குடிபெயர்ந்தார் , 1990 ஆம் ஆண்டில் அரிசோனா பல்கலைக்கழகத்தின் கோள் அறிவியல் பிரிவில் பட்டதாரிப் பள்ளியில் சேரத் தொடங்கினார். 1997 ஆம் ஆண்டில் அரிசோனா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் , மேலும் இவரது பணிக்காக ஜெரார்டு பி. கைப்பர் நினைவு விருது வழங்கப்பட்டது. 1997 முதல் 2002 வரை பியராசோ அரிசோனா பல்கலைக்கழகத்தில் தங்கி ஆராய்ச்சி உதவியாளராக பணியாற்றினார். 2007 ஆம் ஆண்டில் பியராசோ தனது கீத் பவலை மணந்தார்.[5] அதே ஆண்டு பியராசோ ஆராய்ச்சி என்ற நிலையில் இருந்து பி. எஸ். ஐ. யில் மூத்த அறிவியலாளராகப் பதவி உயர்வு பெற்றார்.[5]
2002 ஆம் ஆண்டில் பியராசோ கோள் அறிவியல் நிறுவனத்தில் ஓர் ஆராய்ச்சி அறிவியலாராக பணியாற்றத் தொடங்கினார் , அங்கு இவர் தொடக்க கால புவி, செவ்வாய், ஐரோப்பா தொடர்பான விண்கல் தாக்கப் படிமத்தை ஆய்வு செய்தார்.[2] தைனோசர்களைக் கொன்றதாகக் கூறப்படும் சிக்சுலப் தாக்கம் பற்றிய தகவல்களை வழங்குவதில் பியராசோ குறிப்பிடத்தக்க வகையில் பணியாற்றினார். 2009 ஆம் ஆண்டில் , அரிசோனாவில் உள்ள பாரிங்கர் விண்கல் குழிப் பள்ளத் தாக்கப் படிமமாக்கம் பற்றி நேசனல் ஜியோகிராபிக் இதழில் சிறப்பு மூன்று பகுதிகளாக " அறியப்பட்ட அண்டம் " என்ற தலைப்பில் இடம்பெற்றது.[6] இந்த நேரத்தில் பியராசோ அரிசோனா பல்கலைக்கழக நிலா, கோள் ஆய்வகத்தில் துணை ஆசிரியராகவும் பணியாற்றினார் , அங்கு அவர் வானியற்பியல் கற்பித்தார்.[3] பியராசோ , இணை ஆசிரியர் டாக்டர் கார்டன் ஒசின்சுகியுடன் இணைந்து " மொத்தல் கூழிப்பள்ளங்கள் நிகழ்வும் விளைவுகளும் " என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார்.[7] இந்த புத்தகம் 2012 இல் வெளியிடப்பட்டது.[7]
இறப்பும் பின்னரும்
[தொகு]பியராசோ 2011 மே 15 அன்று தனது 47 வயதில் கருப்பையின் மென்னிழைமக் கடும்புற்றால்என்ற அரிய புற்றுநோயால் இறந்தார்.[2] 1994 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு முதன்மைப் பட்டைட் சிறுகோள் பியராசோவுக்கு அவரது இறப்பிற்குப் பிறகு காணிக்கையாக்கப்பட்டது.[8] இல் 2013 கோள் அறிவியல் நிறுவனம் பியராசோவின் நினைவாக ஒரு பன்னாட்டு மாணவர் பயண விருதை நிறுவியது , அங்கு மாணவர்கள் அமெரிக்காவில் உள்ள மாணவர்கள் வெளிநாட்டில் பட்டப்படிப்பு வேலையைத் தொடர உதவுவதற்காக 2,000 டாலர் வரை நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.[9] கூடுதலாக , நிலாவில் ஒரு பள்ளம் 2015 இல் இவருக்கு கணிக்கையாக்கப்பட்டது.[10] இறுதியாக பியராசோவின் சொந்த ஊரான நோவேலில் உள்ள ஒரு பள்ளி இவருக்குக் கணிக்கையாக்கப்பட்டது. இப்பள்ளி , 6 முதல் 9, 10 முதல் 12 வயதுடைய மாணவர்களுக்கு கற்பிக்கும் தொடக்க, நடுநிலைப் பள்ளியாக செயல்படுகிறது.[11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sykes, Mark (2011-12-01). "Obituary: Elisabetta (Betty) Pierazzo (1963-2011)". 43: 031. doi:10.3847/BAASOBIT2011031.
- ↑ 2.0 2.1 2.2 dhornisher (2017-01-09). "Betty Pierazzo Memorial Research Legacy". Planetary Science Institute. Retrieved 2020-11-10.
- ↑ 3.0 3.1 "Elisabetta Pierazzo, 1963-2011". Lunar and Planetary Laboratory & Department of Planetary Sciences | The University of Arizona. 2018-05-29. Retrieved 2020-11-10.
- ↑ "Elisabetta "Betty" Pierazzo Obituary - AZ | Arizona Daily Star". www.legacy.com. Retrieved 2020-11-10.
- ↑ 5.0 5.1 "Elisabetta (Betty) Pierazzo 1963-2011 | Division for Planetary Sciences". dps.aas.org. Retrieved 2020-11-10.
- ↑ "Tucson Space Scientists Part of New National Geographic Special". University of Arizona News. 2009-02-12. Retrieved 2020-11-10.
- ↑ 7.0 7.1 Osinksi, Gordon (2021). Impact Cratering: Processes and Products. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781405198295.
- ↑ "JPL Small-Body Database Browser". ssd.jpl.nasa.gov. Retrieved 2020-11-10.
- ↑ "Planetary Science Institute Establishes Pierazzo International Student Travel Award | American Astronomical Society". aas.org. Retrieved 2020-11-10.
- ↑ Pierazzo, Gazetteer of Planetary Nomenclature, International Astronomical Union (IAU) Working Group for Planetary System Nomenclature (WGPSN)
- ↑ fischer (2015-01-12). "Italian School Dedicated to PSI Researcher Betty Pierazzo". Planetary Science Institute. Retrieved 2020-11-10.