எரிவெப்பநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரி எரியும் போதான தீப்பிழம்பு
எரியும் மெழுகுவர்த்தியின் சுடர்

ஓர் எரிபொருள் எரிவதற்குக் குறிப்பிட்ட அளவு வெப்பநிலை தேவை. ஒவ்வொரு எரிபொருளும் வெவ்வேறு வெப்பநிலையில் எரியும். சில பொருள்கள் உடனே தீப்பற்றிக் கொள்ளும். சில எரிபொருள்கள் தீப்பற்ற நீண்டநேரம் எடுத்துக்கொள்ளும். ஓர் எரிபொருள் எரியத் தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலை அதன் எரிவெப்பநிலை (Ignition temperature) எனப்படும். ஒரு பெரிய மரத்துண்டை எரியச் செய்யும்போது தீயானது, பரந்த இடத்தில் படுகிறது. நிறை அதிகமாக இருப்பதால், தீப்பற்றத் தேவையான வெப்பநிலையை அடைய அதிக நேரம் எடுத்து கொள்கிறது. மரத்துகளானது சிறியதாக உள்ளது, நிறை குறைவானதாகவும் இருப்பதால் தீப்பற்றத் தேவையான வெப்பநிலை குறைவாகத் தேவைப்படுகிறது. ஆகவே உடனடியாகத் தீப்பற்றிக் கொள்கிறது. எனவே, அதிக நிறை கொண்ட பெரிய மரத்துண்டு தீப்பற்ற அதிக நேரத்தையும், குறைந்த நிறைக் கொண்ட மரத்துகள்கள் தீப்பற்றக் குறைந்த நேரத்தையும் எடுத்துக் கொள்கிறது. நீர் வெப்பமடைகிறது. ஆனால் காகிதக் குவளை எரிவதில்லை. ஏனென்றால், நீரானது காகிதக் குவளையில் உள்ள வெப்பத்தை எடுத்துக் கொண்டு, வெப்பமடைகிறது. எனவே, காகிதக் குவளை தீப்பற்றத் தேவையான வெப்பநிலை கிடைப்பதில்லை. அதனால் அது தீப்பற்றுவதில்லை. இதன் மூலம் நீரானது எவ்வாறு தீத்தடுப்பாகச் செயல்படுகிறது என்பது தெளிவாகிறது. எரியும் பொருள் மீது நீரை ஊற்றும்போது, எரியும் பொருளில் உள்ள வெப்பத்தை நீர் உறிஞ்சிக் கொள்கிறது. இதனால் எரியும் பொருளின் வெப்பநிலை, தீப்பற்றத் தேவையான வெப்பநிலையை விடக் குறைந்து விடுகிறது. ஆகவே எரிதல் நின்று விடுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Law, C. K. (2006). "Laminar premixed flames". Combustion physics. Cambridge, England: Cambridge University Press. பக். 300. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-87052-6. https://books.google.com/books?id=vWgJvKMXwQ8C&pg=RA300. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிவெப்பநிலை&oldid=3721338" இலிருந்து மீள்விக்கப்பட்டது