எம். பி. ஆத்ரேயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். பி. ஆத்ரேயா MB Athreya (பிறப்பு 1941) என்னும் முனைவர் மிருத்யுஞ்சயன் பாலசுந்தரம் ஆத்ரேயா நிர்வாகத் துறையின் ஆசிரியர்(குரு) என்று புகழப்படுபவர்.

வாழ்க்கையும்,கல்வியும்[தொகு]

திருநெல்வேலி அருகேயுள்ள தருவை சிற்றூரில் பிறந்தவர் இவர். பத்தமடையில் பள்ளிப்படிப்பு, புள்ளியியலில் இளநிலைப்பட்டம், செலவுக் கணக்கியலில் அகில இந்திய அளவில் தங்கப்பதக்கம், ஹார்வர்ட் பர்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

பணிகள்[தொகு]

கல்கத்தாவில் உள்ள இந்திய நிர்வாகக் கழகத்தில் பேராசிரியர் பணி, லண்டன் பிசினஸ் பள்ளியில் வருகைப் பேராசிரியர் பணி, பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகக் குழுவில் முன்னாள் இயக்குநர். இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நிர்வாக ஆலோசனை வழங்கும் மையத்தை நடத்திவருகிறார்.

வகித்த பதவிகள்[தொகு]

  • விமான போக்குவரத்து, விமான நிலையங்கள, அணுமின்சாரம் குறித்த கொள்கை முடிவுகளை எடுக்கும் குழுவில் உறுப்பினர்.
  • தொலைத் தொடர்பு மறு சீரமைப்புக் குழுவில் உறுப்பினர்.
  • தேசிய மயமாக்கப்பட்ட 27 வங்கிகளுக்கான இயக்குநர், தலைவரைத் தேர்வு செய்யும் குழு உறுப்பினர்.
  • இந்திய வங்கிகள் அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினர்

விருதுகள்[தொகு]

ஹுவர் ஃபெல்லோ விருது, ஃபோர்டு ஃபெல்லோ விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். [1]

குறிப்புகள்[தொகு]

  1. தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்28
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._பி._ஆத்ரேயா&oldid=1923084" இலிருந்து மீள்விக்கப்பட்டது