எம்.என்.ஆர். பாலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம்.என்.ஆர். பாலன் (M. N. R. Balan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் 14ஆவது புதுச்சேரி சட்டமன்றத்தின் துணை சபாநாயகராக இருந்தார்.[1][2] புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள உழவர்கரை சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய இவர், முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] ஆர்.வி. சானகிராமனின் பாலன் மருமகனாகவும் அறியப்படுகிறார்.[4] புதுச்சேரி அரசுக்குச் சொந்தமான போக்குவரத்து மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக இருந்த பாலன் தலைவர் பதவியை விட்டு பதவி விலகினார்.

புதுச்சேரி சட்டசபை துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்காக காங்கிரசு கட்சியின் சார்பாக எம்.என்.ஆர் பாலன் வேட்புமனுவை தாக்கல் செய்த போது இவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் எம்.என்.ஆர் பாலன் துணை சபாநாயகராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "M.N.R. Balan assumes charge as Puducherry Deputy Speaker" (in en-IN). The Hindu. 2019-09-05. https://www.thehindu.com/news/cities/puducherry/mnr-balan-assumes-charge-as-puducherry-deputy-speaker/article29344680.ece. 
  2. "M N R Balan elected as Deputy speaker of Puducherry assembly". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2019-09-06. பார்க்கப்பட்ட நாள் 2022-11-26.
  3. "Ozhukarai Election Live: Ozhukarai Constituency Election Result, News, Ozhukarai Candidates, Ozhukarai Vote Percentage". Moneycontrol (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-26.
  4. "Puducherry Assembly election 2021, Ozhukarai constituency profile: Deputy Speaker MNR Balan is sitting MLA". Firstpost (in ஆங்கிலம்). 2021-03-01. பார்க்கப்பட்ட நாள் 2022-11-26.
  5. "புதுவை சட்டப்பேரவை துணைத் தலைவராகிறார் எம்.என்.ஆர். பாலன்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/sep/05/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-3228053.html. பார்த்த நாள்: 8 November 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்.என்.ஆர்._பாலன்&oldid=3823960" இலிருந்து மீள்விக்கப்பட்டது