உள்ளடக்கத்துக்குச் செல்

எம்பூல் தீர்த்தக் கோயில், பாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம்பூல் தீர்த்தத்தில் சுத்திகரிப்பு குளியல் சடங்கு.
எம்பூல் தீர்த்தக் கோயிலின் வாயிலில் போமா [1]

எம்பூல் தீர்த்தக் கோயில் (Tirta Empul) (இந்தோனேசிய மொழி: Pura Tirta Empul) இந்தோனேசியாவின் பாலியில் தம்பக்சைரிங் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும். இது ஒரு இந்து பாலினிய நீர்க் கோயில் அல்லது தீர்த்தக் கோயில் ஆகும். கோயில் வளாகம் ஒரு பெட்டிர்டான் அல்லது குளியல் கட்டமைப்பைக் கொண்டு அமைந்துள்ளது. புனித நீரூற்று நீருக்காக அது பிரபலமானது, அங்கு பாலினிய இந்துக்கள் சடங்கு சுத்திகரிப்புக்கு செல்கின்றனர். அங்கு அமைந்துள்ள கோயில் குளத்தில் ஒரு நீரூற்று உள்ளது. இது தொடர்ந்து புதிய தண்ணீரை வழங்குகிறது, இந்த புனித நீரை பாலினய இந்துக்கள் புனிதம் அல்லது அமிர்தம் என்று கருதுகின்றனர்.[2] எம்பூல் Pjர்த்தம் என்றால் பாலினிய மொழியில் புனித வசந்தம், புனித ஊற்று என்று பொருள் ஆகும்.

கோயில் கட்டுமானம்

[தொகு]

எம்பூல் தீர்த்தக் கோயில் கி.பி. 962 ஆம் ஆண்டில் வர்மதேவா வம்சத்தின் போது (10 ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரை) ஒரு பெரிய நீரூற்றைச் சுற்றி எம்பூல் தீர்த்தக் கோயில் நிறுவப்பட்டது. கோயிலின் பெயர் "எம்பூல் தீர்த்தம்" என்பதாகும். அது நிலத்தடி நீர் மூலத்திலிருந்து வருகிறது. பாக்கரிசன் ஆற்றின் ஆதாரமாக வசந்தம் உள்ளது.[3] இந்த கோயில் மூன்று பிரிவுகளைக் கொண்டு அமைந்துள்ளது. ஜபா புரா (முன் முற்றம்), ஜபா தெங்கா (மத்திய முற்றம்) மற்றும் ஜெரோன் (உள் முற்றம்) என்ற வகையில் அவை உள்ளன. ஜபா தெங்காவில் 2 குளங்கள் உள்ளன. அவற்றில் 30 நீரூற்றுப்பொழிவு அமைப்புகள் உள்ளன. அவற்றிற்கு பெங்கெலுகாடன், பெபெர்சிஹான் மற்றும் சுதமலா டான் பங்குரான் செடிக் (விஷம்) என்ற வகையில் பெயர் சூட்டப்பட்டுள்ளன.[4]

உயர்ந்த நனவின் மற்றொரு இந்து கடவுளின் பெயரான நாராயணா நினைவாக இந்த கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.[2] கோயிலை எதிர்நோக்கி அமைந்துள்ள ஒரு குன்றில் நவீன வில்லா ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்த வில்லா 1954 ஆம் ஆண்டில் ஜனாதிபதி சுகர்னோவின் வருகைக்காக கட்டப்பட்டதாகும். தற்போது அந்த வில்லா முக்கியமான விருந்தினர்களுக்கான ஓய்வு இல்லமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சிறப்பு

[தொகு]

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு மேலாக பாலினிய இந்து வழிபாட்டாளர்கள் எம்பூல் தீர்த்தக் கோயிலுக்குச் சென்று வருகின்றனர். இக்கோயில் புனித தீர்த்தக் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. அதில் வருகின்ற அந்த வசந்தம் போன்ற ஊற்றானது இந்திரனால உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த தீர்த்தத்திற்கு நோய் தீர்க்கும் குணம் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்தப் பழக்கமானது எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. வழிபாட்டார்கள் மட்டுமன்றி உலகின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இந்த தீர்த்தத்தின் அழகினைக் கண்டு களிக்கவும், அதில் வெளிவருகின்ற புனித நீரில் குளித்து மகிழவும் வந்துகொண்டிருக்கின்றார்கள்.[5]

நீரின் தரம்

[தொகு]

பெரும்பாலான நேரங்களில் எம்பூல் தீர்த்தம் சடங்குக் குளியலை மேற்கொள்கின்ற வகையில் சுத்தமான நீரின் ஆதாரமாக உள்ளதாக நம்பப்படுகிறது. இருப்பினும், 2017 ஆம் ஆண்டில் ஒரு தேங்காய் பாலி அறிக்கையின்படி, கியானாரில் இருந்த எம்பூல் தீர்த்தத்தில் நீர் மாசுபாடு மற்றும் சுகாதார ஆபத்து பற்றிய அறிக்கைகளை அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.[6]

குறிப்புகள்

[தொகு]
  1. "Bhoma", Wikipedia (in ஆங்கிலம்), 2019-10-15, பார்க்கப்பட்ட நாள் 2019-11-30
  2. 2.0 2.1 "Pura Tirta Empul". Burari Bali. Archived from the original on 6 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 5 October 2014.
  3. Carroll, Ryan Ver Berkmoes, Adam Skolnick, Marian (2009). Bali & Lombok (12th ed.). Footscray, Vic.: Lonely Planet. p. 202. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781742203133. பார்க்கப்பட்ட நாள் 5 October 2014.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  4. Pura Tirta Empul, babadbali.com
  5. The Holy Springs of TIRTA EMPUL: Bali’s Sacred Pool of Purification
  6. "E.coli found in Bali temple water has Gianyar regency focusing on water quality standards". Coconuts Bali. 5 July 2017.