எமிலி இலக்தவால்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எமிலி இலக்தவால்லா
Emily Lakdawalla
எமிலி இலக்தவால்லா, நிலா, கோள் அறிவியல் கருத்தரங்கம் (2013, அகவை 38).
பிறப்பு8 பெப்ரவரி 1975 (1975-02-08) (அகவை 49)
குடியுரிமைஅமெரிக்கா
பணியிடங்கள்கோளியல் கழகம்
கல்வி கற்ற இடங்கள்பிரவுன் பல்கலைக்கழகம்
விருதுகள்அமெரிக்க வானியல் கழகத்தின் கோளியல் பிரிவில் இருந்து ஜொனாதன் எபெர்கார்ட் கோள் இதழியல் விருது
துணைவர்தாரியசு இலக்தவால்லா
பிள்ளைகள்2 பெண்கள்
இணையதளம்
www.planetary.org/blogs/
குறிப்புகள்

எமிலி இலக்தவால்லா (Emily Stewart Lakdawalla) (பிறப்பு: பிப்ரவரி 8, 1975) கோளியல் கழக முதுநிலை பதிப்பாசிரியர் ஆவார். இவர் அறிவியல் எழுத்தாளராகவும் வலைப்பதிவாளராகவும் பெயர்பெற்றவர் ஆவார். இவர் ஆசிரியரகவும் சுற்றுச்சூழல் அறிவுரைஞராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் செவ்வாய்ப் புவியியலிலும் புவிக்கிடப்பியலிலும்டாறிவியல் தொடர்பாடலிலும் அறிவியல் கல்வியிலும் ஆய்வுகள் செய்துள்ளார். இவர் பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் அறிவியல் பர்வையவை முன்வைப்பவர். இதற்காக இவர் விண்வெளியாளரிடமும் ஆர்வலரிடமும் கலந்துரையாடுவார். முகநூலிலும் கூகுள்+ இலும் இணையக் கல்ந்துரையாடலிலும் ஈடுபடுவார். இவர் பிரித்தானுயா ஒலிபரப்பிலும் தேசிய கொள்கை வானொலியிலும் தோன்றி கோளியல் பற்றியும் விண்வெளித் தேட்டம் பற்றியும் உரையாற்றுவார்.[மேற்கோள் தேவை]

கல்வி[தொகு]

இவர் ஆம்கெர்சுட்டு கல்லூரியில் புவியியலிலரிளங்கலைப் பட்டம் பெற்றார்; 2000 இல் பிரவும் பல்கலைக்கழகத்தில் கோள்புவியியலில் மூதறிவியல் பட்டம் பெற்றார்.[1]

வாழ்க்கைப் பணி[தொகு]

இவர் ஆம்கெர்சுட்டில் கலவியை முடித்ததும் 1996 முதல் 1998 வரை இல்லினாயிசு, இலேக் பாரெசுட்டுவில் உள்ள கவுண்டிரி பகற்பள்ளியில் ஆராம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை அறிவியல் பாடம் கற்பித்துள்ளார்.[1]

இவர்1997 இல் கலீலியோ விண்வெளிக்கலத்தில் இருந்து பெற்ற வியாழனின் இருநிலாக்களான அயோ, ஐரோப்பா ஆகியவற்றின் படிமங்களைக் கொண்டு செய்யப்பட்ட ஒப்புருவாக்கத் திட்டத்தால் ஊக்கமும் ஆர்வமும் பெற்ற இவர் கோள்களின் புவியியற் கட்டமைப்பைத் தன்னந்தனியாக ஆய்வு செய்ய முடிவெடுத்தார்.[2]

ஆராய்ச்சி[தொகு]

கோளியல் கழகம்[தொகு]

எழுத்துப்பணி[தொகு]

ஊடகத் தோற்றங்கள்[தொகு]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

சொந்த வாழ்க்கை[தொகு]

இவர் தன் கணவர் பொருளியலாளர் தாரியசு இலக்தவால்லாவுடன் இலாசு ஏஞ்சலீசில் வாழ்கிறார். இவர்கள் இருவரும் ஆம்கெர்சுட்டில் இளவல் பட்டப் பட்டம் படிக்கும்போது 1990 களில் முதலில் சந்தித்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு பெண்கள் உண்டு.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Emily Lakdawalla extended bio". The Planetary Society. பார்க்கப்பட்ட நாள் 2014-01-14.
  2. Lakdawalla, Emily (August 26, 2010). "It is NOT failure to leave academia". Women in Planetary Science. பார்க்கப்பட்ட நாள் 2014-01-10.

நூல்தொகை[தொகு]

இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Emily Lakdawalla
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எமிலி_இலக்தவால்லா&oldid=2762947" இலிருந்து மீள்விக்கப்பட்டது