என் சீஸை நகர்த்தியது யார்? (நூல்)
Appearance
என் சீஸை நகர்த்தியது யார்? - நூலட்டை | |
நூலாசிரியர் | ஸ்பென்சர் ஜான்சன்[1] |
---|---|
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
வகை | சுயசிந்தனை நூல்கள் |
வெளியீட்டாளர் | ஜி. பி. புட்னம் சன்ஸ் |
வெளியிடப்பட்ட நாள் | செப்டம்பர் 8, 1998 |
ஊடக வகை | பதிப்பு(Paperback) |
பக்கங்கள் | 96 pp. |
ISBN | 0-399-14446-3 |
OCLC | 38752984 |
155.2/4 | |
LC வகை | BF637.C4 J64 1998 |
என் சீஸை நகர்த்தியது யார்? (ஆங்கிலம்:Who Moved My Cheese?), மாற்ற மேலாண்மையை மிக எளிய கதையின் மூலம் சித்தரிக்கும் ஒரு சுயமுன்னேற்ற நூல் ஆகும். செப்டம்பர் 8, 1998 ஆம் ஆண்டு, ஸ்பென்சர் ஜான்சன் என்பவரால் எழுதப்பட்டு பிரசுரிக்கப் பட்டது. 37 மொழிகளில் எழுதப்பட்டு 26 மில்லியன்கள் விற்பனை செய்யப்பட்ட மேலாண்மை வர்த்தக நூலாகும்.
இது தமிழில் நாகலட்சுமி சண்முகம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸினால் 2012இல் வெளியிடப்பட்டது.
கதைக்கரு
[தொகு]மாற்ற மேலாண்மையைக் கருவாகக் கொண்டு இரு சுண்டெலிகளும், இரு குள்ளர்களும் தங்களது உணவிற்காக சீசை (பாலாடைக்கட்டியைத்) தேடி அலைவதாகும்.
கதா பாத்திரங்கள்
[தொகு]- சுண்டெலி 1 - ஸ்னிஃப்
- சுண்டெலி 2 - ஸ்கர்ரி
- குள்ளர் 1 - ஹெம்
- குள்ளர் 2 - ஹா
மேற்கோள்
[தொகு]- ↑ "ஸ்பென்சர் ஜான்சன் வலைத்தளம்". Archived from the original on 2014-07-31. பார்க்கப்பட்ட நாள் 25 ஆகத்து 2014.