என்றி மார்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
என்றி மார்சு

என்றி மார்சு (Henry Thomas Marsh 5 மார்ச்சு 1950)) இலண்டனில் வாழ்ந்து வரும் ஒரு நரம்பியல் அறுவை மருத்துவர் ஆவார்.[1] இருபது ஆண்டுகள் இலண்டன் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் மூளை அறுவைப் பிரிவில் பணி செய்து 2015 இல் ஒய்வு பெற்றார். அவர்கள் கைகளில் உங்கள் உயிர் என்னும் நிகழ்ச்சியை பிபிசி ஆவணப்படத்தில் நடத்தினார். உக்ரேய்ன் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் மருத்துவமனைகளில் தம் மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகிறார். வாழ்க்கை, இறப்பு, மூளை அறுவை சிகிச்சை என்ற ஒரு நூலையும் அவரது வாழ்க்கை நினைவுகள் கொண்ட மற்றொரு நூலையும் எழுதி வெளியிட்டார்.[2] கேட் பாக்சு என்ற அவருடைய இரண்டாம் மனைவியுடன் இலண்டனில் வாழ்ந்து வருகிறார்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்றி_மார்சு&oldid=2719264" இருந்து மீள்விக்கப்பட்டது