என்டே தங்கம் (சிறுகதை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலையாள எழுத்தாளரும், தமிழ் இலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்டவருமான வைக்கம் முஹம்மது பஷீர் அவர்களால் முதன்முதலாக எழுதி வெளியிடப்பட்டது இந்த " என் தங்கம் " (என் செல்லம்) என்ற சிறுகதை. 1937 ஆம் ஆண்டில் இந்த கதை ஜெயகேசரி என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டது. தற்போது இந்த பத்திரிக்கை பதிப்பில் இல்லை. பின்னர் அது " தங்கம் " என்ற பெயரில் விசப்பு ( பசி, 1954, தற்போதைய புத்தகங்கள்) கதைத் தொகுப்பில் வெளியிடப்பட்டது. மலையாள காதல் புனைகதைகளில் இக்கதை ஒரு தனி பாணியைக்கொண்டதாகும். மேலும் இதன் கதாநாயகி ஒரு இருண்மையான பாதிரப்படைப்பைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். [1]

பின்னணி[தொகு]

அஜ்மீர், பெஷாவர், காஷ்மீர் மற்றும் கல்கத்தா போன்ற நகரங்களில் பல்வேறு தரக்குறைவான வேலைகளைச் செய்துவிட்டு, 1930களின் நடுப்பகுதியில் பஷீர் எர்ணாகுளத்திற்குத் திரும்பினார். அங்கு ஹோட்டல்களில் பாத்திரங்களைக் கழுவுதல் போன்ற பல்வேறு வேலைகளில் சேர்ந்து தனது வாழ்க்கைப்பயணத்தை தொடர்ந்துள்ளார். மேலும் அங்கே அவர் கேரளாவில் ஒரு விளையாட்டுப் பொருட்களின் ஏஜென்சியை நடத்திவரும் சியால்கோட்டைச் சேர்ந்த ஒரு விளையாட்டுப் பொருட்களின் உற்பத்தியாளரைச் சந்தித்து, தனது தந்தையின் வணிகம் திவாலானதையும், குடும்பம் ஏழ்மையடைந்ததையும் கண்டு வீடு திரும்பி, எர்ணாகுளத்தில் உள்ள சியால்காட் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் ஏஜெண்டாக பணியாற்றத் தொடங்கினார். ஆனால் இயற்கையோ அவரை மேலும் போராட்டத்தை சந்திக்க ஒரு சைக்கிள் விபத்து மூலம் அவரை தற்காலிகமாக செயலிழக்கச் செய்தபோது அந்த வேலையையும் இழந்தார். குணமடைந்ததும், மீண்டும் அவர் வேலைகளுக்கான முடிவில்லாத வேட்டையை தொடங்கிய சமயத்தில் தான் ஜெயகேசரி பத்திரிகையின் அலுவலகத்திற்குள் நுழைந்தார், அந்த பத்திரிகையின் ஆசிரியர் தான், அங்குள்ள மற்ற வேலைகளையும் செய்யும் வேலையாளாகவும் இருந்துள்ளார், அதனால் வேலை எதுவும் இல்லை எனவும் மாறாக, அவரது பத்திரிகையில் கதைகள் எழுதினால் அதற்கு தொகை வழங்குவதாகவும் கூறியுள்ளார். [2] இவ்வாறுதான்  பஷீர் ஜெயகேசரிக்கு கதைகள் எழுதி, வருமானமீட்ட தொடங்கியுள்ளார். அதே பத்திரிகையில் தான் தான் 1937 ஆம் ஆண்டு "என் தங்கம்" (என் செல்லம்) என்ற அவரது முதல் சிறுகதை வெளியானது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. K. Satchidanandan (February 2008). "Sultan of story: A birth centenary tribute to Vaikom Mohammed Basheer who picked up his tales from life's poetry". Frontline 25 (2). http://www.hindu.com/fline/fl2502/stories/20080201501110100.htm. பார்த்த நாள்: 3 June 2013. 
  2. Madhubālā Sinhā (2009). Encyclopaedia of South Indian literature, Volume 3. Anmol Publications. பக். 240. 
  3. Vaikom Muhammad Basheer (1954). Vushappu (Hunger). Current Books. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்டே_தங்கம்_(சிறுகதை)&oldid=3799820" இலிருந்து மீள்விக்கப்பட்டது