எந்திரன் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எந்திரன் விருது (Robot Award) சப்பானின் பொருளாதார, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம், 2006 ஆம் ஆண்டில் ஏற்படுத்திய ஒரு வருடாந்திர விருதாகும். எந்திரனையும், எந்திரனியல் ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டையும் சந்தைப்படுத்துவதை இலக்காகக் கொண்டு இவ்விருது உருவாக்கப்பட்டது. 65 விண்ணப்பங்களில் இருந்து எட்டு பேர் 2008 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர் [1].

கடந்த ஆண்டில் சிறந்த சேவையை வழங்கியதாகக் கருதப்படும் எந்திரன்கள் இவ்விருது பெற தகுதியுடையவர்கள் ஆவர். எதிர்காலச் சந்தை வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து, குறிப்பிட்டதொரு பங்களிப்பை செய்யும் வாய்ப்பை அதிகமாகப் பெற்றுள்ள எந்திரன் படைப்புகள் இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கீகரிக்கப்படுகின்றன. இத்திட்டத்தில், எந்திரன் என்பது மூன்று தொழில்நுட்பக் கூறுகளை உள்ளடக்கிய ஓர் அறிவார்ந்த இயந்திர அமைப்பு என்று வரையறுக்கப்படுகிறது. எந்திரனின் பகுதிகள் மற்றும் பயன்படுத்தப்பட்டுள்ள மென்பொருள்களின் சிறப்புத் தன்மைகள் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன. உணர்தல், நுண்ணறிவும் கட்டுப்பாடும் மற்றும் இயக்கம் ஆகியனவற்றை வெளிப்படுத்தும் பின்வரும் எந்திரன் வகைகள் போட்டிக்கு தகுதி பெறுகின்றன [2].

  • சேவை எந்திரன்கள்: அலுவலகங்கள், வீடுகள் மற்றும் மக்களின் பொதுப் பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்டவை.
  • தொழிற்சாலை எந்திரன்கள்: தொழிற்சாலைகளில் பெருமளவில் தயாரிப்பு நிகழுமிடங்களில் பணிபுரிவதற்காக வடிவமைக்கப்பட்டவை,
  • பொது மற்றும் எல்லைப்புற எந்திரன்கள்: பேரிடர் நிகழ்வுத் தளங்கள், விண்வெளி மற்றும் ஆழ்கடல் பயணங்கள் போன்ற நிகழ்வுகளில் உயிருக்குப் போராடும் தப்பிப்பிழைத்தவர்களை கண்டறிதல் போன்ற சிறப்புக் காரணங்களுக்காக வடிவமைக்கப்பட்டவை,
  • எந்திரன் உறுப்புகள் மற்றும் மென்பொருட்கள்: எந்திரன் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள சிறப்பு உறுப்புகள் மற்றும் மென்பொருட்களின் உன்னதத் தன்மைக்காக வடிவமைக்கப்பட்டவை ஆகிய நான்கு பிரிவுகளின் அடிப்படையில் அனைத்து எந்திரன்களும் வகைப்படுத்தப்படுகின்றன.

எதிர்கால சந்தை வளர்ச்சிக்கான வாய்ப்பு மற்றும் திறன் அடிப்படையிலான உள்ளீடுகளை அடிப்படையாகக் கொண்டு நிபுணர்கள் மதிப்பீடுகளை வழங்கும் தேர்ந்தெடுத்தல் செயல்முறையில் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இவை தவிர,

  • (அ) சமூகத் தேவைகள்
  • (ஆ) பயணாளிகள் பார்வையில் ஈட்டப்பட்ட புள்ளி மதிப்பு, மற்றும்
  • (இ) தொழில்நுட்ப புத்தாக்கம் முதலான அளவுகோல்களும் தேர்வு நடைமுறையில் கூடுதலாகப் பயன்படுத்தப்படுகின்றன [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Japan Announces 'Robot Award 2008' Winners
  2. 2.0 2.1 "Announcement of Prize winners of The Robot Award 2008". Archived from the original on 2011-03-22. பார்க்கப்பட்ட நாள் 2016-09-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எந்திரன்_விருது&oldid=3850409" இலிருந்து மீள்விக்கப்பட்டது