எண்ணுபெயர் புணர்ச்சி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழில் எழுதப்படும் எண்ணுபெயர் சொற்கள் மற்றொரு சொற்களுடன் இணைவது எண்ணுப்பெயர் புணர்ச்சியாகும்.
அவை எண்ணுபெயர் + எண்ணுபெயர்,
எண்ணுபெயர் + பிற சொற்கள்
என்னும் அடிப்படையில் அமையலாம்
இதற்கான புணர்ச்சியின் இலக்கணம் பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூலில் விதி 188 முதல் 199 வரை விளக்கப்பட்டுள்ளது.
விதிகள்
[தொகு]"எண்ணிறை யளவும் பிறவு மெய்தின்
ஒன்று முதலெட் டீறா மெண்ணுண்
முதலீ ரெண்முத னீளு மூன்றா
றேழ்குறு கும்மா றேழல் லவற்றின்
ஈற்றுயிர் மெய்யு மேழ னுயிரும்
ஏகு மேற்புழி யென்மனார் புலவர்"
விளக்கம்
[தொகு]எண்ணுபெயரும்,நிறைப்பெயரும்,அளவுப்பெயரும்,பிற பெயரும் வருமொழியாக வரும் போது நிலைமொழியாக நின்ற ஒன்று முதல் எட்டு வரையுள்ள சொற்களில்,
ஒன்றும்,இரண்டும் முதலெழுத்து நீளும், ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு,ஐந்து,எட்டு ஆகியவற்றின் ஈற்றுயிர்மெய் எழுத்து கெடும், ஏழு என்பதன் ஈற்றுயிர் எழுத்து கெடும்,
மூன்று,ஆறு,ஏழு ஆகியவை முதலெழுத்து குறுகும், என்பதாகும்,
எ.கா -
ஒன்று + ஊர் = ஓரூர்
இரண்டு + ஆயிரம் = ஈராயிரம்
மூன்று + மருந்து = மும்மருந்து
நான்கு + படை = நாற்படை
ஐந்து + வகை = ஐவகை
ஆறு + பத்து = அறுபது
ஏழு + கடல் = ஏழ்கடல்
எட்டு + வகை = எண்வகை
கருவி நூல்
[தொகு]நன்னூல் மூலமும் விருத்தியுரையும் (அ.தாமோதரன் அவர்களின் பதிப்பு) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்