எட்ஜ் (உலாவி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்ரோசாப்ட் எட்ஜ்
மேம்பாட்டாளர்மைக்ரோசாப்ட்
தொடக்க வெளியீடு29 சூலை 2015; 8 ஆண்டுகள் முன்னர் (2015-07-29)
எழுதப்பட்ட மொழிசி++[1]
பொறிஎட்ஜ்HTML (2014 - 2019)

பலிங்க் (தற்போது)

ஐஓஎஸ்: வெப்கிட்
வளர்ச்சி நிலைசெயலில் உள்ளது
உரிமம்தனியுடைமை மென்பொருள்;[2] a component of Windows 10
வலைத்தளம்microsoftedge.com

மைக்ரோசாப்ட் எடஜ் (ஆங்கிலம்: Microsoft Edge; சூட்சமபெயர்: இசுபார்டன்) என்பது மைக்ரோசாப்ட் உருவாக்கியயுள்ள இணைய உலாவி ஆகும். இது முதலில் விண்டோஸ் 10, விண்டோஸ் 10 மொபைல் மற்றும் எக்சுபாக்ஸ் ஒன்க்காக வெளியிடப்பட்டது. 2017 இல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குத்தளத்திற்கு வெளியிடப்பட்டது[3][4]. 2019 இல் மேக்OS இற்கு வெளியிடப்பட்டது[5]. முதலில் இது எட்ஜ்HTML இல் உருவாக்கபட்டு, விண்டோஸ் 10 க்குடன் சூலை 25, 2015 அன்று வெளியிடப்பட்டது. 2019 இல் மைக்ரோசாப்ட் எட்ஜ் கிரோமியத்தில் சீரமைக்கப்பட்து. இந்தப் பதிய எட்ஜ் பிலிங்க் மற்றும் V8 பொறியைப் பயன்படுத்துகிறது. மைக்ரோசாப்ட எட்ஜின் கிரோமியம் பதிப்பு சனவரி 15, 2020 அன்று பொதுப் பயனுக்காக வெளியிடப்பட்டது.

எட்ஜ்HTML பதிப்பு[தொகு]

விண்டோசு இயங்குதளத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள இண்டர்நெட் எக்சுபுளோரர் உலாவிக்கு பதிலாக, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் சனவரி 2015ஆம் ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உலாவி எட்ஜ் ஆகும். இது தற்போது விண்டோஸ் 10 கணிணி, ஆண்ட்ராயிட், ஐஓஎஸ் கைபேசி ஆகியவற்றிற்குக் கிடைக்கிறது. இதன் மூலம் கடந்த இருபது ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்து வரும் இண்டர்நெட் எக்சுபுளோரர் உலாவி கைவிடப்படுவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 2015 மார்ச் மாதம் அறிவித்துள்ளது.

உலாவி நீட்சிகள் மார்ச் 2016 இல் சேர்கப்பட்டது. நீட்சிகள் மைக்ரேசாப்ட் கடையில் விற்கப்படுகிறது.


மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்ஜ்_(உலாவி)&oldid=3791908" இருந்து மீள்விக்கப்பட்டது