எச்சரிக்கை அடையாளம்
Appearance
எச்சரிக்கை அடையாளம் எனப்படுவது சாலைப் போக்குவரத்தின் போது அபாயங்களை எச்சரிக்கை செய்து அமைக்கப்பட்டிருக்கும் போக்குவரத்து அடையாளம் ஆகும்.
அனேக நாடுகளில் முக்கோண வடிவில், தடிப்பான சிகப்பு எல்லைக் கோடிட்டு, வெள்ளைப் பின்புலத்தில் கறுப்பு குறியீடுகள் இடப்பட்டு இருக்கும். சில நாடுகளில் பின்புலம் மஞ்சள் (Amber) ஆகவும் இருக்கலாம். சீனாவில் எல்லைக் கோடு கறுப்பாகவும் பின்புலம் மஞ்சளாகவும் இருக்கும்.
ஐக்கிய அமெரிக்க, கனடா, மெக்சிக்கோ, ஆஸ்திரேலியா, யப்பான், மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இவை சாய்சதுர வடிவில், தடிப்பான கறுப்பு எல்லைக் கோடிட்டு, மஞ்சள் பின்புலத்தில் கறுப்பு குறியீடுகள் இடப்பட்டிருக்கும்.