எக்ஸில்
Appearance
எக்ஸில் பிரான்சில் இருந்து வெளிவந்த ஒரு தமிழ்ச் சஞ்சிகை. தற்போது நின்றுவிட்டது. 13 இதழ்கள் வெளிவந்தவை. முதல் மூன்று இதழ்கள் ஜெபா. விஜி. கலைச்செல்வன் லக்ஸ்மி ஸ்ராலின். கற்சுறா ஆகியோர் இணைந்து வெளியிட்டார்கள். மூன்றாவது இதழுடன் முரண்பாடு( என்ன முரண்பாடு என்பது 4வத இதழின் முகப்பில் உள்ளது) கொண்டவர்களான கலைச் செல்வன் லக்ஸ்மி ஆகியோரை வெளியேற்றிய பின் ஜெபா விஜி ஸ்ராலின் கற்சுறா ஆகியோர் இணைந்து மிகுதி இதழ்களை வெளிக் கொண்டு வந்தார்கள்.எக்ஸில் வெளியீட்டகத்திற்கு ஊடாகப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் க. கலாமோகனின் நிஷ்டை சக்கரவர்த்தியின் யுத்தத்தின் இரண்டாம் பாகம் ஸ்ராலினின் தமிழீழப் புரட்டு மற்றும் மட்டக்களப்புத் தமிழகம் மீள் பதிப்பு ஆகியவை அடங்கும். (தகவல்- பதிவு கற்சுறா-07 -04-2021)
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- நூலகத் திட்டத்தில் எக்ஸில் இதழ்கள்
- புலம்பெயர் சஞ்சிகைகள்[1]