எக்சாகுளோரோசைக்ளோயெக்சேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எக்சாகுளோரோசைக்ளோயெக்சேன் (Hexachlorocyclohexane) என்பது ஆறு கார்பன் வளையத்தில் ஒவ்வொரு கார்பனுடனும் ஒரு குளோரினும் ஒரு ஐதரசனும் சேர்ந்திருக்கும் பல ஆலசனேற்ற வகை கரிமச் சேர்மமாகும். இச்சேர்மத்தின் கட்டமைப்பில் பல மாற்றியன்கள் காணப்படுகின்றன. வளையயெக்சேனிலுள்ள தனி குளோரின் அணுக்களில் முப்பரிமாண வேதியியலில் இம்மாற்றியன்கள் வேறுபடுகின்றன. சில சமயங்களில் எக்சாகுளோரோசைக்ளோயெக்சேன் சேர்மத்தை பிழையாக பென்சீன் எக்சாகுளோரைடு என்று அழைக்கிறார்கள். இருமுனையப் பிணைப்புகளுடன் கூடிய சைக்ளோயெக்சேன் முப்பரிமாண அமைப்பு நிலைப்புத்தன்மை கொண்ட பெரிய அணுக்களை ஆராயும் மாதிரிகளாக இவை பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஆய்வில் வெவ்வேறு வடிவியல் அமைப்புகளின் விளைவுகள் ஆராயப்படுகின்றன. சில மாற்ரியன்கள் பூச்சிகொல்லிகலாக உள்ளன [1].

சில பொதுவான அமைப்புகள்:

  • α-HCH (CAS RN: 319-84-6 ), அல்லது α-பெ.எ.கு, ஆல்பா-எக்சாகுளோரோசைக்ளோயெக்சேன், ஒளி சுழற்றும் தன்மையுடைய ஒரே மாற்றியன் .
  • β-HCH (CAS RN: 319-85-7 ), அல்லது β-பெ.எ.கு,பீட்டா- எக்சாகுளோரோசைக்ளோயெக்சேன்.
  • γ-HCH (CAS RN: 58-89-9 ), அல்லது γ-பெ.எ.கு, காமா- எக்சாகுளோரோசைக்ளோயெக்சேன்.அல்லது லின்டேன்
  • δ-HCH (CAS RN: 319-86-8 ), or δ-பெ.எ.கு, டெல்டா- எக்சாகுளோரோசைக்ளோயெக்சேன்
  • t-HCH (CAS RN: 608-73-1 ), அல்லது t-பென்சீன் எக்சா குளோரைடு|பெ.எ.கு]], தொழில்நுட்ப- எக்சாகுளோரோசைக்ளோயெக்சேன்


மேற்கோள்கள்[தொகு]

  1. Zdravkovski, Zoran (2004). "Theoretical Study of the Stability of Hexachloro- and Hexafluorocyclohexane Isomers". Bulletin of the Chemists and Technologists of Macedonia 23 (2): 131–137. http://www.pmf.ukim.edu.mk/PMF/Chemistry/glasnik/2004_2/GHTM-23-2-445-Zdravkovski.pdf. பார்த்த நாள்: 2016-04-17. 

.

புற இனைப்புகள்[தொகு]