எகிப்திய தேசிய வேளாண் நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எகிப்திய தேசிய வேளாண் நூலகம் (Egyptian National Agricultural Library)[1] 1996 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[2] இவ்வகையில் நிறுவப்பட்ட அமெரிக்க தேசிய நூலகங்கள் நான்கில் இதுவும் ஒன்றாகும். பெல்ட்சுவில்லே, மேரிலாந்து, வாசிங்டன், டி.சி ஆகிய இடங்களில் மற்ற மூன்று நூலகங்கள் உள்ளன.[3] இந்நூலகம் உலகின் மிக விரிவான விவசாயம் மற்றும் தொடர்புடைய அறிவியல் தரவுகளை வழங்குகிறது.[4] எகிப்தின் கிசா நகரத்திலுள்ள புனித தோக்கி பகுதியிலுள்ள நில மேம்பாட்டுக் கட்டிடத்தின் முதல் இரண்டு தளங்களில் எகிப்திய தேசிய வேளாண் நூலகம் அமைந்துள்ளது.[5][5] 6,200 சதுர மீட்டர் பரப்பளவில் நூலகம் அமைந்துள்ளது. இங்கு 300 பேர் அமர முடியும்.[6] அனைத்து அமெரிக்க விவசாயத் துறை கள நூலகங்களும், தேசிய மாநில நில-மானிய வலையமைப்பும் எகிப்திய தேசிய வேளாண் நூலகத்துடன் வலைப்பின்னல் இணைப்பில் உள்ளன.[7] 1995 ஆம் ஆண்டு தேசிய வேளாண்மை நூலகத்தின் ஆதரவுடன் 1930 ஆம் ஆண்டு எகிப்தின் பறவைகள் குறித்த வட்டு ஒன்றை இந்நூலகம் தயாரித்தது. இந்த 2 தொகுதி 700 பக்க வேலை தேசிய வேளாண் உரை எண்ணிம இலக்கமாக்கல் திட்டம் வெளியிடப்பட்டது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ENAL". www.allacronyms.com.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. "National Agricultural Library Annual Report for 1996" (PDF). pubs.nal.usda.gov/. Archived from the original (PDF) on 2021-05-14.
  3. Panel On National Libraries' International Activities. "International Programs Of The National Agricultural Library". web.simmons.edu. பார்க்கப்பட்ட நாள் 2020-11-15.
  4. "Egyptian National Agricultural Library library, St.Dokki, Egypt – Special library – Libdex.com". www.libdex.com. பார்க்கப்பட்ட நாள் 2020-11-15.
  5. "Egyptian National Agricultural Library - ENAL -- Agricultural Research Center". librarytechnology.org. பார்க்கப்பட்ட நாள் 2020-11-15.
  6. "About ENAL". enal.{{cite web}}: CS1 maint: url-status (link)
  7. (in English) Egyptian National Agricultural Library (ENAL). 1995. https://agris.fao.org/agris-search/search.do?recordID=US201300057582. 
  8. Blake, Peggy J. "SUCCESS THROUGH WORKING TOGETHER: THE U. S. NATIONAL AGRICULTURAL LIBRARY'S APPROACH TO COOPERATIVE ACTIVITIES". Purdue.edu.{{cite web}}: CS1 maint: url-status (link)