ஊராளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஊராளிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஊராளி என்னும் பழங்குடியினராவர் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்திலும், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் வாழ்கின்ற ஒரு தமிழகப் பழங்குடிகள் வகையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அரையன், பில்லியன் என்னும் இரண்டு சகோதரர்களின் வம்சம் என்றும், இவர்கள் இருவரும் பாண்டிய அரசர்களுக்குக் குடை பிடித்தவர்கள் என்றும் கூறுவர். இவர்கள் மலையாளம் கலந்த தமிழ் மொழியைப் பேசுகின்றார்கள். இவர்களில் கல்கட்டி, குப்பர், புங்கர், பேராதவர், மோரிகர், வெள்ளகர், உப்பிலிகள் என்று ஏழு குலங்களாகப் பிரிந்துள்ளனர் இம்மக்கள். இந்த ஏழு குலங்களுக்கும் ஒரு தலைவர் இருப்பதுபோல, ஏழு தெய்வங்களும் இருக்கின்றன. ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள் உடன் பங்காளி உறவு முறையினராக உள்ளனர். இதனால் ஒரே குலத்துக்குள் திருமணம் செய்வது கிடையாது.

ஊராளி மக்களின் பொருளாதாரம் வேளாண்மை, கால்நடைகளை மேய்த்தல் ஆகிய இரண்டையும் சார்ந்தே இருக்கிறது. வேட்டை அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு துப்பாக்கி இருந்தது. ஆனால், இப்போது அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிடனர். இவர்களின் நிலங்கள் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தேயிலை, காபி போன்ற பணப் பயிர்கள் பயிரிடுவதற்காக ஆங்கிலேயர்களால் பறிக்கப்பட்டன. விடுதலைக்குப் பிறகு பெரும் பணக்காரர்களும், வணிகர்களும், மேல்தட்டு சாதியினரும் இம்மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி நிலங்களைப் பிடுங்கிக்கொண்டனர். இன்றைக்கு அதே நிலங்களில் அன்றாடக் கூலிகளாக இருக்கிறார்கள்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. அ. இருதயராஜ் (14 ஆகத்து 2017). "ஊராளி பழங்குடியினரின் முடிவில்லாத் துயரம்!". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 14 ஆகத்து 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊராளி&oldid=3576727" இலிருந்து மீள்விக்கப்பட்டது