ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, குறவன்குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறவன்குளம் பள்ளியின் வெளிப்புறத் தோற்றம்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குறவன்குளம் (P.U.M.S Kuravankulam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் எல்லைக்குட்பட்ட அலங்காநல்லூர் பேரூராட்சியின் 13 ஆவது வாா்டில் அமைந்துள்ளது.[1] கடந்த 2015-16 ஆம் கல்வியாண்டில் இப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது கிடைத்தது.

பள்ளியின் வரலாறு[தொகு]

குறவன்குளம் பள்ளியின் வகுப்பறை

இப்பள்ளி 1957 ஆம் ஆண்டு மரத்தடியில் தொடங்கப்பட்டது. பின் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அரசால் ஓட்டுக்கட்டிடம் கட்டப்பட்டு ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் நடத்தப்பட்டன. 2008 ஆம் ஆண்டு இப்பள்ளி நடுநிலைப்பள்ளியாகத் தரம் உயா்த்தப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் வைரவிழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

பள்ளியின் நிா்வாகம்[தொகு]

பள்ளி தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறையின் கீழ் அலங்காநல்லுாா் உதவி தொடக்கக் கல்வி அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது. அனைவருக்கும் கல்வி இயக்க வழிகாட்டுதலும் இப்பள்ளிக்கு முழுமையாகக் கிடைக்கிறது.

பள்ளியின் வசதிகள்[தொகு]

பள்ளியில் 4 கெட்டிக் கட்டடங்களும் ஒரு ஓட்டுக்கட்டடமும் போதுமான காற்றோற்றமான வசதிகளுடன் உள்ளன. நன்கு பராமாிக்கப்பட்ட குடிநீா் வசதி மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளன. ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனி அறை உண்டு. 6 கணினிகள் கொண்ட கணினி வகுப்பறை உள்ளது. பள்ளிக்கு அருகே உள்ள பொது மந்தை விளையாட்டிடமாகப் பயன்படுகிறது.

சிறப்புக்கள்[தொகு]

மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி

பள்ளியில் ஆசிரியா்கள் மற்றும் பசுமைப்படை மாணவா்களால் மலா் தோட்டம் உருவாக்கப்பட்டு பராமாிக்கப்படுகிறது. பள்ளியின் சுற்றுச் சுவா் மாணவா்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. தேவைப்படும் காலங்களில் விழிப்புணா்வுப் பேரணிகள் சிறப்புற நடத்தப்படுகின்றன.

கற்பித்தல் பணி[தொகு]

அனைத்துவகைப் பாடங்களுடன்க கராத்தே, ஓவியம், யோகா மற்றும் நடனம் கற்றுக் கொடுக்கப்படுகிறது.160 மாணவா்கள் 8 ஆசிரியா்களின் வழிகாட்டுதலில் கல்வி பயில்கின்றனா்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஊராட்சி ஒன்றியப் பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2022/nov/23/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3954473.html. பார்த்த நாள்: 13 May 2023.