ஊதுலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊதுலை

ஊதுலை (Blast furnace) ஒரு உலோகவியல் உலைக்களம் ஆகும். இது கனிமங்களை உருக்கி தொழிற்சாலை உலோகங்களை உற்பத்தி செய்யப்பயன்படுகிறது. பொதுவாக இரும்பு உற்பத்தியில் அதிகமாக பயன்படுகிறது.

ஊதுலை வரைபடம்
1. Hot blast from Cowper stoves
2. Melting zone (bosh)
3. Reduction zone of ferrous oxide (barrel)
4. Reduction zone of ferric oxide (stack)
5. Pre-heating zone (throat)
6. Feed of ore, limestone, and coke
7. Exhaust gases
8. Column of ore, coke and limestone
9. Removal of slag
10. Tapping of molten pig iron
11. Collection of waste gases

ஊதுலையின் மேலிருந்து கனிமம், எரிபொருள் மற்றும் இளக்கி தொடர்ந்து செலுத்தப்படுகிறது. அப்பொழுது கீழிருந்து காற்று, சில சமயம் ஆக்சிசன் செலுத்தப்படுவதால் உலையின் தொடர் வேதி வினை ஏற்படுகிறது. தொடர் வினையினால் கனிமம் உலோகமாக மாற்றம் அடைந்து உலையின் கீழ் பகுதியை அடைகிறது. இறுதியில் உருகிய உலோகம் மற்றும் கசடு பெறப்படுகிறது. இது கீழ் கதவு வழியாக வெளியேற்றப்படுகிறது. அனற் காற்று மேல்வழியாக வெளியேற்றப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊதுலை&oldid=2756147" இருந்து மீள்விக்கப்பட்டது