ஊக வணிகர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஊக வணிகர்
[தொகு]பங்குச்சந்தையில் முதலீடுகளின் மதிப்பு அதிகரிப்பதலும், இலாபம் பெறுவதலும் நோக்கமாக இருக்கும் நபர்களுக்கு ஊகவணிகர் என்று பெயர். வாங்கி விற்பதன் மூலம் இலாபத்தை விரும்புவர்.பத்திரங்களின் உடமையை பெறுவதும் இல்லை.
ஊக வணிகர்களின் வகைகள்
[தொகு]காளை
[தொகு]பத்திரங்களை எதிர்காலத்தில் விலையேற்றம் பெறும் என எதிர்பார்க்கின்ற ஊக வணிகர். தெஜிவாலா என அழைக்கப்படுகின்றனர். "எல்லாம் நன்மைக்கே" என மனபாங்கு கொண்டவர் எதிர்காலத்தில் விலையில் பத்திரங்களை விற்க இயலும் என்ற எண்ணத்தில் தற்பொழுது பத்திரங்களை வாங்க முனைகிறார்.
கரடி
[தொகு]எதிர்காலத்தில் விலை வீழ்ச்சி அடையும் என்று எண்ணுகின்ற ஊக வணிகர் கரடி அல்லது "மண்டிவாலா"என அழைக்கப்படுகிறார். எதிலும் கெட்டதையே காண்கின்ற மனப்பாங்கு கொண்டவர் பத்திரங்கள் பின்னர் குறைந்த விலையில் வாங்கி கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தற்பொழுது பத்திரங்களை விற்கிறார்.
கலைமான்
[தொகு]முன்னெச்செரிக்கை உடையவர் இவர் முனைமத்தில் நிறுமத்தின் பங்குகள் விற்கப்படும் என்று அறிந்தவுடன் புதிய விடுப்புகளில் பங்கு கோரி விண்ணப்பம் செய்வார். தனக்கு ஒதுக்கீடு செய்தால் முனைமம் பெற்றவுடன் விற்றுவிடுவார். இவர் "முனைம வேட்டையாளர்"என அழைக்கப்படுவர்.
முடவாத்து
[தொகு]தற்போதைய தம் நடவடிக்கைகளில் உள்ள இடர்பாடுகளை தீர்ப்பதில் போராடி கொண்டிருக்கிற கரடி ஊக வணிகரே முடவாத்து என அழைக்கப்படுகிறார்.