உவமை உருவக மாற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உவமை உருவக மாற்றம்[தொகு]

உவமை[தொகு]

ஒரு பொருளை அதைவிடச்சிறந்த மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக்கூறுவது 'உவமை' ஆகும். உவமைத்தொடரில் உவமை முன்னும் உவமேயம் பின்னுமாக அமைந்துவரும்.

சான்று[தொகு]

மதிமுகம்=மதி போன்ற முகம்

இத்தொடரில் முகம் மதியோடு ஒப்பிடப்படுகிறது. மதி-உவமை; முகம்-உவமிக்கப்படும் பொருள்9உவமேயம்)

உருவகம்[தொகு]

உவமையையும் உவமிக்கப்படும் பொருளையும் வேறுபடுத்தாமல் இரண்டும் ஒன்றே எனக்கூறுவது 'உருவகம்' ஆகும். உருவகத்தொடரில் உவமேயம்(உவமிக்கப்படும் பொருள்)முன்னும் உவமானம் (உவமை) பின்னுமாக அமைந்துவரும்.

சான்று:[தொகு]

முகமதி

இத்தொடர் முகம்வேறு மதிவேறு என்னும் வேறுபாடின்றி, 'முகமே மதி' எனப்பொருள்படுமாறு அமைந்துள்ளது.

உவமை உருவக மாற்றம்[தொகு]

உவமைத்தொடரை உருவகமாக மாற்றும்பொழுது,உவமேயம் முன்னும் உவமை பின்னுமாக வருமாறு தொடர் அமைக்கவேண்டும். உருவகத்தொடரை உவமைத்தொடராக மாற்றும்பொழுது உவமை முன்னும் உவமேயம் பின்னுமாக வருமாறு தொடரை அமைக்கவேண்டும்.

பார்வைநூல்:[தொகு]

பத்தாம் வகுப்பு-தமிழ் இலக்கணம்-ப.எண்:61-தமிழ்நாட்டுப்பாடநூல் நிறுவனம்-மு.பதிப்பு1`1990 பத்தாம்வகுப்பு-தமிழ்ப்பாடநூல்-ப.எண்:121,-தமிழ்நாடு பாடநூல் ம்ற்றும் கல்வியியல் பணிகள் கழகம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=உவமை_உருவக_மாற்றம்&oldid=3084627" இருந்து மீள்விக்கப்பட்டது