உள்ளீட்டுப் பாய்ச்சல் மின்னோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மின்தேக்கி தொகுப்பானது மின்னேற்றும்பொழுது ஏற்படும் உள்ளீட்டுப் பாய்ச்சல் மின்னோட்டத்தின் மாறுபாடுகளின் உதாரணம் மேலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.

உள்ளீட்டுப் பாய்ச்சல்_மின்னோட்டம் (Inrush current) என்பது எந்த மின்சுற்றுக்களையும் முதலில் துவக்கும்போது வழக்கத்தினை விட அதிகமான மின்னோட்டத்தினை சிறிய அளவில் எடுப்பதைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக வெள்ளொளிர்வு விளக்கு அதன் நுண்ணிழையின் வெப்பநிலை அதிகரித்து மின்தடை அதிகரிக்கும் வரை அதிகமான மின்னோட்டத்தினை சிறிய அளவில் எடுக்கும் அதுவே உள்ளீட்டுப் பாய்ச்சல் மின்னோட்டமாகும். உள்ளீட்டுப் பாய்ச்சல் மின்னோட்டமானது மின்மாற்றி, மின்னோடியினை துவக்கும்போதும் இருக்கும்.

உள்ளீட்டுப் பாய்ச்சல் மின்னோட்டத்தினைக் கட்டுப்படுத்தும் சாதனமாக எதிர்மறை வெப்பநிலை குணக வெப்பமாறுமின்தடையானது (NTC) பயன்படுகின்றது. எந்தவொரு மின்சுற்றுக்களிலும் பாயும் ஆரம்ப மின்னோட்டத்தின் பாய்ச்சல் அளவு வழக்கத்தை விட சிறிது அதிகமாக இருக்கும். அதனைக் கட்டுப்படுத்த 'NTC' தெர்மிஸ்டர் பயன்படுகின்றது.