உலோகம் (புதினம்)
Appearance
உலோகம் ஜெயமோகன் எழுதிய நாவல். 2010ல் கிழக்கு பதிப்பகம் வெளியுட்டது.
கதை
[தொகு]ஈழப்போரைப் பின்னணியாகக் கொண்ட புதினம். ஈழத்தின் போராளிக்குழு ஒன்றால் எதிர்போராளிக்குழு தலைவரைக் கொல்ல ஒருவன் அனுப்பப்படுகிறான். அவன் பலவருடங்கள் மெல்லமெல்ல முன்னேறி அந்த தலைவருடனேயே தங்கியிருக்கிறான். அவரை நன்றாக அறிமுகம் செய்துகொண்டு நெருக்கமானவனாக ஆகிறான். அப்போது கொலைக்கான உத்தரவு வருகிறது. எந்த போராக இருந்தாலும் அது மனிதர்களை ஆயுதங்களாக ஆக்கவே உதவும் என்ற மையக்கருவை ஒட்டி எழுதப்பட்ட நாவல். கதைநாயகன் ஓர் உலோக ஆயுதம் போன்றவன் என்கிறது.