உலூத்தரன் பிறபொருளெதிரியாக்கி அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருத்துவர் மேரி என். கராபோர்ட் பிலடெல்பியாவின் குழந்தைகள் மருத்துவமனையின் ஊனீர் மாற்றப் பிரிவில் பணிபுரிந்தார். இங்கு இவர், 1962ஆம் ஆண்டில், உலகில் உள்ள அரிய வகை லு (a-b−) இரத்த வகையைக் கொண்ட ஒரு சிலரில் இவரும் ஒருவர் என்பதைக் கண்டுபிடித்தார். பெரிய பிரித்தானியாவில் நோயாளி ஒருவருக்கு இரத்த தானமும் செய்தார்

உலூத்தரன் பிறபொருளெதிரியாக்கி அமைப்பு (Lutheran antigen system) என்பது சிவப்பு இரத்த அணுக்களின் மேற்பரப்பில் உலூத்தரன் பிறபொருளெதிரியாக்கி பொருட்களின் இருப்பின் அடிப்படையில் மனித இரத்தத்தின் வகைப்பாடு ஆகும். இதுவரை 19 உலூத்தரன் பிறபொருளெதிரியாக்கி உள்ளதாக அறியப்பட்டுள்ளன.[1]

இந்த பிறபொருளெதிரியாக்கி அனைத்தும் பிசிஏஎம் (அடிப்படை உயிரணு ஒட்டு மூலக்கூறு) மரபணுவில் உள்ள மாறுபாடுகளிலிருந்து தோன்றுகின்றன. இந்த அமைப்பு லூவா மற்றும் லப் எனப்படும் இரண்டு இணைஓங்கு மாற்றுரு வெளிப்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஆபெர்ஜெர் பிறபொருளெதிரியாக்கி என அறியப்படும் ஆவா மற்றும் ஆப் பிறபொருளெதிரியாக்கியின் ஒரு தனி இரத்தக் குழுவை உருவாக்கும் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. ஆனால் பின்னர் இவை பிசிஏஎம் மரபணுவின் மாறுபாடுகளால் எழும் லூத்தரன் பிறபொருளெதிரியாக்கி என அறியப்பட்டது.

Lu(a+b−) மற்றும் Lu(a+b+) ஆகிய தோற்றவமைப்பு ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகைக்குள் பல்வேறு மரபணு நிகழ்வெண்களில் காணப்படுகின்றன. Lu(a−b+) தோற்றவமைப்பு அனைத்து இனக்குழுவிலும் மிகவும் பொதுவானது, ஆனால் Lu(a−b−) தோற்றவமைப்பு அசாதாரணமானது. கருவில் இருந்தாலும், பிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய் அல்லது இரத்தமாற்ற எதிர்வினைகளில் இது அரிதாகவே பங்கேற்கிறது.

உலூத்தரன் உட்பட மிகவும் பொருத்தமான மனித இரத்தக் குழு அமைப்புகளுக்கு நோயாளியின் நோயெதிர்ப் பொருளைக் கண்டறிய நோயெதிர்ப்பொருள் பட்டை

மேற்கோள்கள்[தொகு]