உலர் சலவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெர்மனியில் தயாரான ஒரு உலர் சலவை இயந்திரம்

உலர் சலவை (Dry cleaning) என்பது தண்ணீரைப் பயன்படுத்தாமல் துணிகளை வேதிப்பொருட்களைக்கொண்டு சுத்தம் செய்யும் முறையாகும். பல கண்டுபிடிப்புகளைப்போல உலர் சலவையும் தற்செயலாகவே கண்டு பிடிக்கப்பட்டது. மண்ணெண்ணெயில் விழுந்த துணிகளில் உள்ள அழுக்குகளும், கறைகளும் காணாமல் போயின. இதைக்கண்டே உலர்சலவை எண்ணம் தோன்றியது. துணிகளில் அழுக்குப்படிவதற்குக் காரணம் எண்ணைப்பசைதான். உலர் சலவை செய்யும்போது துணிகளில் உள்ள எண்ணைப்பசை கரைக்கப்பட்டு அகற்றப்படுவதோடு அத்துடன் ஒட்டியுள்ள அழுக்கும் நீங்குகிறது. உலர்சலவை செய்ய பல நீர்மங்களை பயன்படுத்துகின்றனர். இவற்றில் பெர்குளோரோ எதிலீன் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. நவீன உலர் சலவை முறையை முதன் முதலில் பயன்படுத்தியவர் ஐக்கிய அமெரிக்காவைச்சேர்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கரான தாமஸ் எல் ஜென்னிங்ஸ் என்பவராவார். இவர் மார்ச் 3,1821 முதல் இம்முறையைக் கொண்டு துணிகளை உலர் சலவைச் செய்தார்.[1]

உலர்சலவை முறை[தொகு]

முதல் கட்டமாக உலர் சலவை இயந்திரத்தில் மினால் டர்பன்டைன் போன்ற பெட்ரோலியப் பொருளையும் துணியையும் போடுகின்றனர். 15-20 நிமிடங்கள் கழித்து துணிகள் சுத்தமாகி இருக்கும் மேலும் அழுக்குகள் இருந்தால் அவற்றை இரண்டாம் கட்டமாக அடையாளம் கண்டு, அது என்ன கறை என்பதை ஆராய்ந்து அதற்கேற்றபடி வெள்ளை பெட்ரோல், தின்னர் போன்ற பொருட்களை பயன்படுத்தி கறைகளை நீக்குகின்றனர்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலர்_சலவை&oldid=2747944" இருந்து மீள்விக்கப்பட்டது