உலக வானொலி நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலக வானொலி நாள்
World Radio Day
Día Mundial de la Radio
World Radio Day.png
பன்னாட்டு வானொலிக் குழுவினால் அங்கீகாரம் பெற்ற உலக வானொலி சின்னம்
கடைபிடிப்போர்ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள்
நாள்13 பெப்ரவரி
நிகழ்வுஆண்டுக்கு ஒரு நாள்

உலக வானொலி நாள் (World Radio Day) என்பது ஆண்டு தோறும் பெப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெசுக்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது.[1] வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.[2]

உலக வானொலி நாள் 2012[தொகு]

முதலாவது உலக வானொலி நாள் இத்தாலியில் அமைந்துள்ள பீசா பல்கலைக்கழகத்தில் 2012 பெப்ரவரி 13 இல் கொண்டாடப்பட்டது. வானொலிகளின் மூலம் குறைந்த செலவில் தகவல்களை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்பதே இதன் நோக்கமாகும்.[3]

2013 உலக வானொலி நாள் பாரிசில் உள்ள யுனெசுக்கோ தலைமையகத்தில் இடம்பெற்றது.

உலக வானொலி நாள் 2014[தொகு]

யுனெசுக்கோ அமைப்பின் யோசனைப்படி, 2014ஆம் ஆண்டுக்கான உலக வானொலி நாளின் தொனிப்பொருளாக பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களை வானொலி மூலம் வலுவூட்டுவது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

2018ஆம் ஆண்டுக்கான தொனிப்பொருள் வானொலியும் விளையாட்டும் ஆகும்.

2023ம் ஆண்டுக்கான உலக வானொலி தினத்தின் கருப்பொருளாக ‘வானொலி மற்றும் அமைதி’ அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் அமைதியை நிலைநாட்டுவதில் வானொலியின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இக்கருப்பொருள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.thehindu.com/features/kids/listen-to-the-radio/article4403308.ece
  2. "World Radio Day 2012". 14 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. "வானொலி சேவை வேறெந்த ஊடகங்களினாலும் அழிந்து விடாது என்றும் நிலைத்திருக்கும்". தினகரன். 14 பெப்ரவரி 2014. 14 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_வானொலி_நாள்&oldid=3652247" இருந்து மீள்விக்கப்பட்டது