உலக மெய்யியல் நாள்
Appearance
உலக மெய்யியல் நாள் (World Philosophy Day) என்பது யுனெஸ்கோ அமைப்பால் பிரகடனம் செய்யப்பட்ட ஒரு சர்வதேச நாள் ஆகும். இந்நாள் ஒவ்வொரு வருடமும் வருகின்ற நவம்பர் மாதத்தின் மூன்றாம் வியாழக்கிழமை அனுட்டிக்கப்படுகின்றது.[1] முதலாம் உலக மெய்யியல் நாள் 2002 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி அனுட்டிக்கப்பட்டது. மனித சிந்தனையை, தனி மனித வாழ்விலும், கலாசாரங்களுக்கிடையிலும், மெய்யியலின் ஊடாக வளப்படுத்துவதே உலக மெய்யியல் நாள் அனுட்டிப்பதன் முக்க்கிய காரணம் என யுனெஸ்கோ சுட்டிக்காட்டுகின்றது.