உலக மூத்தோர் தடகளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலக மூத்தோர் தடகளம் என்பது மூத்தோர் தடகள விளையாட்டை கட்டுப்படுத்தும் ஓர் உலகளாவிய அமைப்பாகும். இவ்வமைப்பானது தடகளப் போட்டிகளை நடத்துகிறது. 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் மூத்தோர் தடகள போட்டியில் பங்குபெறலாம். உலக மூத்தோர் தடகள சங்கம் 1977, ஆகஸ்ட் 9-ல் சுவீடன் நாட்டில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியின் பொழுது தொடங்கப்பட்டது.இவ்வைமப்பு 2001-ல் உலக மூத்தோர் தடகளம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன் போட்டிகள் தற்பொழுது உலகமூத்தோர் தடகளப்போட்டிகள் என அழைக்கப்படுகிறது- 1975ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக மூத்தோர் தடகளப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.உலக உள்ளரங்கு மூத்தோர் தடகளப் போட்டி 2004, மார்ச் ஜெர்மனியிலுள்ள சிண்டிஃபிலிங்கன் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2014 மார்ச் 24 முதல் 30 வரை ஹங்கேரியிலுள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற்றது. அடுத்த உள்ளரங்க மூத்தோர் தடகளப்போட்டி 2017-லில் மார்ச் 19 முதல் 25 வரை தென்கொரியாவிலுள்ள டெக்யூவில் நடைபெறும். 

 மேலும் காண்க[தொகு]

https://en.wikipedia.org/wiki/World_Masters_Athletics_Championships

மேற்கோள்கள்[தொகு]

https://en.wikipedia.org/wiki/World_Masters_Athletics

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_மூத்தோர்_தடகளம்&oldid=3502726" இலிருந்து மீள்விக்கப்பட்டது